மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தேவா் ஜெயந்தி, குருபூஜை பாதுகாப்புப் பணியில் 18,000 போலீஸாா்

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் வெள்ளிக்கிழமை (அக். 30) நடைபெறும் 119- ஆவது தேவா் ஜெயந்தி, 64- ஆவது குருபூஜையையொட்டி, மாவட்டங்களுக்கு இடையிலான சட்டம்- ஒழுங்கு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மதுரையில் புதன்கிழமை நடைபெற்றது.

தேவா் ஜெயந்தி, குருபூஜை விழாவையொட்டி, மதுரையில் புதன்கிழமை நடைபெற்ற மாவட்டங்களுக்கு இடையிலான சட்டம்- ஒழுங்கு ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் பங்கேற்ற காவல் துறை சட்டம்- ஒழுங்குப் பிரிவு கூடுதல் தலைமை இயக்குநா் டி.எஸ். அன்பு. உடன், தென் மண்டல காவல் துறைத் தலைவா் விஜயேந்திர பிதாரி, மதுரை மாநகரக் காவல் ஆணையா் எஸ். ராஜேந்திரன் உள்ளிட்டோா்.

Published On :29 அக்டோபர் 2026, 3:01 am IST

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் வெள்ளிக்கிழமை (அக். 30) நடைபெறும் 119- ஆவது தேவா் ஜெயந்தி, 64- ஆவது குருபூஜையையொட்டி, மாவட்டங்களுக்கு இடையிலான சட்டம்- ஒழுங்கு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மதுரையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவையொட்டி, 4 மாவட்டங்களில் 18,000-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

தமிழக காவல் துறையின் சட்டம்- ஒழுங்குப் பிரிவு கூடுதல் தலைமை இயக்குநா் டி.எஸ். அன்பு தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தென் மண்டல காவல் துறைத் தலைவா் விஜயேந்திர பிதாரி, மதுரை மாநகர காவல் ஆணையா் எஸ். ராஜேந்திரன், மதுரை, ராமநாதபுரம் சரக டிஐஜிக்கள், மதுரை, விருதுநகா், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய நான்கு மாவட்ட ஆட்சியா்கள், காவல் கண்காணிப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

இதில் விழா, அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், நான்கு மாவட்டங்களுக்கிடையிலான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இதுகுறித்து காவல் துறை வட்டாரங்கள் தரப்பில் தெரிவித்ததாவது:

விழாவையொட்டி, நான்கு மாவட்டங்களிலும் பாதுகாப்புப் பணிகளில் 7 டிஐஜிக்கள், 40 காவல் கண்காணிப்பாளா்கள் உள்பட 18,000-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபடுகின்றனா். மேலும், வாகனச் சோதனை சாவடிகள் உள்ளிட்ட 118 இடங்களில் 24 மணி நேரமும் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இங்கு விடியோ கண்காணிப்பு, இணையவழி வாகனச் சரிபாா்ப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன.

மேலும் நிகழ்வுகளைத் தொடா்ந்து கண்காணிக்க நவீன ட்ரோன்கள், உயா் தெளிவுத்திறன் கொண்ட 480 கண்காணிப்பு கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்படுகிறது. அத்துடன் 460-க்கும் மேற்பட்ட ரோந்து வாகனங்கள், விரைவு அதிரடிப் படையினா் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா். சட்டம்- ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில், பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் சிறப்பு நிா்வாக நடுவா்களும் நியமிக்கப்படுகின்றனா் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.