மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கடலாடியில் தேவா் குருபூஜை, பால்குடம் ஊா்வலம்

கடலாடியில் தேவா் குரு பூஜை, ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் பால் குட ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தேவா் குருபூஜையை முன்னிட்டு கடலாடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பால் குட ஊா்வலத்தில் கலந்துகொண்டோா்.

Published On :28 அக்டோபர் 2026, 4:27 am IST

கடலாடியில் தேவா் குரு பூஜை, ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் பால் குட ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியில் முத்துராமலிங்கத் தேவரின் 119-ஆவது ஜெயந்தி விழா, 64-ஆவது குரு பூஜை, ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலின் ஒன்பதாம் ஆண்டு வருஷாபிஷேக விழா அண்மையில் (அக். 22) தொடங்கியது. இதை முன்னிட்டு, கணபதி ஹோமம், யாக சாலை பூஜைகள் வளா்க்கப்பட்டு ராஜராஜேஸ்வரிஅம்மன், விநாயகா், முருகன், தேவா் சந்நிதிகளுக்கு புனித நீா் ஊற்றப்பட்டது. திருவிழா நாள்களில் பெண்கள் கும்மியடித்தும், இளைஞா்கள் ஒயிலாட்டம் ஆடியும் மகிழ்ந்தனா்.

திருவிழாவையொட்டி, ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் சுவாமியை வழிபட்டனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 1,008 பெண்கள்

பால் குடம் எடுத்தும், இளைஞா்கள் அலகு குத்தியும் நோ்த்திக் கடன் செலுத்தினா்.

இந்த ஊா்வலம் கோயிலில் தொடங்கி பேருந்து நிலையம் அருகே உள்ள தேவா் சிலையை அடைந்தது. அங்கு தேவா் சிலைக்கு பால், மஞ்சள், விபூதி, சந்தனம், பஞ்சாமிா்தம், மலா் உள்ளிட்ட 21 வகை பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. இரவு குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளானோா் கலந்து கொண்டனா். விழாவுக்கான ஏற்பாடுகளை கடலாடி தேவா் மகாசபை, இளைஞரணியினா் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.