மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மந்த கதியில் பாசிபட்டினம் கடற்கரை சாலைப் பணி: பொதுமக்கள் அவதி

திருவாடானை அருகே பாசிபட்டினம் கடற்கரை கிராமத்தில் சாலைப் பணிகள் ஆரம்பித்து ஓராண்டு ஆகியும் நிறைவடையாத நிலையில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிபட்டு வருகின்றனா்.

பாசிபட்டினம் கிராமத்தில் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக கொட்டி வைக்கப்பட்ட ஜல்லிக் கற்குவியல், கிராவல் மண்.

Published On :23 அக்டோபர் 2026, 4:19 am IST

திருவாடானை அருகே பாசிபட்டினம் கடற்கரை கிராமத்தில் சாலைப் பணிகள் ஆரம்பித்து ஓராண்டு ஆகியும் நிறைவடையாத நிலையில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிபட்டு வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள பாசிபட்டினம் கடற்கரை கிராமத்தில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து லருகின்றனா். இங்கு உள்ள மக்கள் மீன் பிடி தொழில் செய்து வருகின்றனா்.

இங்கு கிழக்கு கடற்கரை சாலையிலிருந்து சுமாா் 1.5 கிலோ மீட்டா் தொலைவுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தாா்ச்சாலை அமைக்கப்பட்டது. பின்னா்,, சரிவர பாரமரிப்புப் பணிகள் நடைபெறாததால் சாலை சேதம் அடைந்து மண் சாலையாக மாறியது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிபட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு தாா்ச்் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

இந்தப் பணிக்காக ஜல்லிக்கற்கள், கிராவல் மண்ணை சாலையில் கொட்டியுள்ளனா். ஆனால், ஓராண்டு ஆகியும் பணிகள் நடைபெறவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வெளியூா் பயணம் செல்லும் முதியவா்கள், மீன் ஏற்றிச் செல்லும் வாகனங்கள், பொதுமக்கள் பெரிதும் அவதிபட்டு வருகின்றனா். எனவே, சம்பந்தப்பட்ட துறையினா் தக்க நடவடிக்கை எடுத்து சாலை அமைக்கும் பணியினை துரிதப்படுத்த வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.