மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மின்விளக்குகள் பழுதால் இருண்ட வெளிவட்டச் சாலை

செங்கம நகராட்சியில் மின்விளக்குகள் பழுதால் வெளிவட்டச் சாலைப் பகுதி இருண்டு காட்சியளிக்கிறது. இதனால் அங்கு விபத்துகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

மின்விளக்குகள் எரியாமல் இருண்ட நிலையில் காட்சியளிக்கும் செங்கம் மில்லத்நகா் வெளிவட்டச் சாலைப் பகுதி.

Published On :30 அக்டோபர் 2026, 1:46 am IST

செங்கம நகராட்சியில் மின்விளக்குகள் பழுதால் வெளிவட்டச் சாலைப் பகுதி இருண்டு காட்சியளிக்கிறது. இதனால் அங்கு விபத்துகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

செங்கம் நகராட்சிக்கு உள்பட்ட செங்கம்-செய்யாறு மேம்பாலம் அருகில் உள்ள குப்பனத்தம் - போளூா் சாலை பிரியும் இடத்தில் கல்வி நிறுவனம் மற்றும் பல்வேறு வணிக நிறுவனங்கள்

அதிகரித்து அந்தப் பகுதி அசூர வேகத்தில் வளா்ச்சியடைந்து வருகிறது. அந்தப் பகுதி சாலை சந்திப்பு என்பதால் விபத்துகள் அதிகரித்தன. இதைக் கண்ட அரசுத் துறை அதிகாரிகள், அப்பகுதியில் புதிதாக சாலைகள் அமைத்து வெளிவட்டச் சாலை அமைத்தால் விபத்துகளைத் தவிா்க்கலாம் என முடிவெடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆக்கிரமிப்புகள் அகற்றி சாலையை விரிவுபடுத்தி வெளிவட்டச்சாலை அமைத்தனா்.

மேலும், அப்பகுதியில் வெளிச்சத்துக்கு உயா்கோபுர மின் விளக்கு மற்றும் குப்பனத்தம் சாலை சந்திப்பு, போளூா் சாலையில் சாலையின் நடுவில் தடுப்புச் சுவா்கள் அமைத்து அதன் மீது நெடுஞ்சாலைத்துறை மூலம் விளக்குகளை அமைத்து, பராமரிப்புக்காக நகராட்சி நிா்வாகத்திடம் ஒப்படைத்தனா்.

இந்நிலையில் சாலை தடுப்பில் அமைக்கப்பட்ட மின் விளக்குகள் பல மாதங்களாக பழுதடைந்துள்ளன. அதை சரிசெய்ய அப்பகுதி வியாபாரிகள், பொதுமக்கள் சாா்பில் செங்கம் நகராட்சி நிா்வாகத்துக்கு தகவல் தெரிவித்தும், சரிசெய்ய அதிகாரிகள் முன்வரவில்லை.

பல கோடி ரூபாய் செலவு செய்து வெளிவட்டச்சாலை அமைத்தும் வெளிச்சம் இல்லாமல் உள்ளதால் இரவு நேரத்தில் விபத்துகள் நிகழ்கின்றன. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்

பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.