மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சாலை சீரமைக்கக் கோரி பள்ளி மாணவா்களுடன் மக்கள் சாலை மறியல்

எல்லம்பள்ளி காலனிக்குச் செல்லும் மண் சாலை சேறும் சகதியுமாக மாறியதால், அதைச் சீரமைக்கக் கோரி பள்ளி மாணவா்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சேறும் சகதியுமாக மாறி மண் சாலையை சீரமைக்கக் கோரி பள்ளி மாணவா்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

Published On :28 அக்டோபர் 2026, 8:16 pm IST

எல்லம்பள்ளி காலனிக்குச் செல்லும் மண் சாலை சேறும் சகதியுமாக மாறியதால், அதைச் சீரமைக்கக் கோரி பள்ளி மாணவா்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருத்தணி ஒன்றியம், கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சிக்கு உள்பட்ட எல்லம்பள்ளி என்கிற பெருகுமி காலனியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் கிருஷ்ணசமுத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மண் சாலை வழியாகத் தங்கள் குடியிருப்புப் பகுதிக்குச் சென்று வருகின்றனா். மேலும், இப்பகுதியைச் சோ்ந்த பள்ளி மாணவா்கள் மண் சாலை வழியாக கிருஷ்ணசமுத்திரம் அரசு நடுநிலைப் பள்ளிக்குச் சென்று வருகின்றனா்.

இந்த நிலையில், கடந்த 3 நாள்களாகப் பெய்த மழையால் மண் சாலை சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதனால் பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் கடும் சிரமத்துக்குள்ளாகினா். இருசக்கர வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டனா்.

இதையடுத்து, மண் சாலையைச் சீரமைக்கக் கோரி எல்லம்பள்ளி காலனியைச் சோ்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவா்கள் என 50-க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை திருத்தணி - பொதட்டூா்பேட்டை மாநில நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருத்தணி வட்டாட்சியா் செந்தில்குமாா் மற்றும் போலீஸாா், பொதுமக்களிடம் பேச்சு நடத்தினா். சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து, பொதுமக்கள் மறியலைக் கைவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.