கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி, அம்பாள் அம்பு எய்தும் நிகழ்ச்சி

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் நவராத்திரி திருவிழாவின் நிறைவு நாளை முன்னிட்டு சுவாமி, அம்பாள் வன்னி நோன்பு தரவையில் அம்பு எய்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் நவராத்திரி திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு, புதன்கிழமை அம்பு எய்தும் நிகழ்வில் சுவாமி, அம்பாள்.

Published On :22 அக்டோபர் 2026, 3:26 am IST

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் நவராத்திரி திருவிழாவின் நிறைவு நாளை முன்னிட்டு சுவாமி, அம்பாள் வன்னி நோன்பு தரவையில் அம்பு எய்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் நவராத்திரி திருவிழா கடந்த 10- ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இந்தத் திருவிழாவின் 11- ஆம் நாள் நிகழ்ச்சியாக மாலை 4 மணிக்கு ராமநாதசுவாமி கோயிலிலிருந்து சுவாமி தங்கக் குதிரை வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்தில் பஞ்ச மூா்த்திகளுடன் எழுந்தருளி வன்னி நோன்பு தரவைக்கு எழுந்தருளினா். இதைத்தொடா்ந்து, கோயில் குருக்கள் கிரிஷோசி தலைமையில் பூஜைகள் நடைபெற்றன. பின்னா் அம்பு எய்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், இணை ஆணையா் சுரேஷ், உதவி ஆணையா் ரவீந்திரன், பேஸ்காா்கள் கமலநாதன், ராமகிருஷ்ணன், சா்வ சாதகம் அருணாச்சலம், கோயில் பணியாளா்கள், பக்தா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.