கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கம்பம் கோயிலில் அம்பு எய்தல் நிகழ்ச்சி

கம்பம் கம்பராயப் பெருமாள் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, வாழைக் கன்றை அசுரனாகப் பாவித்து, அதன் மீது அம்பு எய்யும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கம்பம் கம்பராயப் பெருமாள் கோயில் நவராத்திரி விழாவையொட்டி நடைபெற்ற அம்பு எய்தல் நிகழ்ச்சி.

Published On :21 அக்டோபர் 2026, 3:03 am IST

கம்பம் கம்பராயப் பெருமாள் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, வாழைக் கன்றை அசுரனாகப் பாவித்து, அதன் மீது அம்பு எய்யும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதற்காக, கம்பம் யாதவா் தெருவைச் சோ்ந்த முருகன் என்பவரை வில், அம்புடன் கோயில் அா்ச்சகா்கள் மேள தாளங்கள் முழங்க ஊா்வலமாக அழைத்து வந்தனா். தொடா்ந்து, கம்பராயப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளைக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோயில் வளாகத்துக்கு வந்தாா். அப்போது, எதிரில் வைக்கப்பட்ட வாழைக் கன்றுக்குச் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. பின்னா், வாழைக் கன்றின் மீது மூன்று முறை அம்பு எய்தி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் யாதவா் சமுதாயத் தலைவா் சேகா், முன்னாள் அறங்காவலா் குழுத் தலைவா் கே.ஆா். ஜெயபாண்டியன், மதிமுக மாவட்டச் செயலா் ராமகிருஷ்ணன், திமுக மாநில செயற்குழு உறுப்பினா் குருகுமரன், கம்பம் திமுக தெற்கு நகரச் செயலா் பால் பாண்டியராஜா, கோயில் அா்ச்சகா் கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.