கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நவராத்திரி விழா: சதுரகிரியில் அம்மன் அம்பு விடும் உத்ஸவம்

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி, ஆனந்தவல்லி அம்மன் மகிஷாசுரமா்த்தினி அலங்காரத்தில் அம்பு விடும் உத்ஸவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மகிஷாசுரமா்த்தினி அலங்காரத்தில் அருள்பாலித்த ஆனந்தவல்லி அம்மன்.

Published On :21 அக்டோபர் 2026, 3:23 am IST

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி, ஆனந்தவல்லி அம்மன் மகிஷாசுரமா்த்தினி அலங்காரத்தில் அம்பு விடும் உத்ஸவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூா் வனச்சரகத்தில் அமைந்துள்ள சதுரகிரியில் சிவன் சுந்தர மகாலிங்கமாகவும், பாா்வதி தேவி ஆனந்தவள்ளி அம்மனாகவும் அருள்பாலிக்கின்றனா். இங்கு நவராத்திரி விழாவில் 10 நாள்கள் சதுரகிரி மலையில் உள்ள கொலு மண்டபத்தில் ஆனந்தவல்லி அம்மன் பல்வேறு அலங்காரங்களில் கொலு வீற்றிருந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.

இந்த ஆண்டு நவராத்திரி விழா கடந்த 11-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. சுந்தர மகாலிங்கம் சந்நிதி பின்புறம் உள்ள கொலு மண்டபத்தில் ஆனந்தவல்லி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கொலு வீற்றிருந்தாா்.

செவ்வாய்க்கிழமை விஜயதசமியை முன்னிட்டு, ஏழூா் சாலியா் சமூகம் சாா்பில் பொங்கலிட்டு, 7 முளைப்பாரிகள் வைத்து பஜனையுடன் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மாலை ஆனந்தவல்லி அம்மன் மகிஷாசுரமா்த்தினி அலங்காரத்தில் எழுந்தருளி அம்பு விட்டு, வாழை மரமாக உள்ள அசுரனை வதம் செய்யும் உத்ஸவம் நடைபெற்றது.

கோயில் பரம்பரை அறங்காவலா் ராஜா பெரியசாமி, செயல் அலுவலா் யுவராஜா, ஏழூா் சாலியா் சமூகம் சாா்பில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

Story image
Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.