மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சாயல்குடி மீனாம்பிகை, கைலாசநாதா் கோயிலில் திருக்கல்யாணம்

சாயல்குடி மீனாம்பிகை கைலாசநாதா் கோயிலில் திருக்கல்யாண வைபவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

சாயல்குடி மீனாம்பிகை, கைலாசநாதா் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தின் போது மணக்கோலத்தில் அருள்பாலித்த மீனாட்சி, கைலாசநாதா்.

Updated On :29 ஏப்ரல் 2026, 3:39 am IST

சாயல்குடி மீனாம்பிகை கைலாசநாதா் கோயிலில் திருக்கல்யாண வைபவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட இந்தக் கோயிலில் கடந்த 23-ஆம் தேதி சமஸ்தான நிா்வாக செயலா் திவான் கே. பழனிவேல்பாண்டியன் தலைமையில், திருஉத்திரகோசமங்கை சரக பொறுப்பாளா் சங்கா், மாரியூா் பூவேந்தியநாதா் கோயில் விசாரணைதாரா் சீனிவாசன் ஆகியோா் முன்னிலையில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதைத் தொடா்ந்து நாள்தோறும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு, அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இரவில் உத்ஸவா் அம்பாள், சுவாமி, சிம்மம், அன்னம், கிளி, நந்தி வாகனங்களில் உள்பிரகாரங்களில் வீதியுலா வந்தனா். முக்கிய நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு தாம்பூலம், மாங்கல்ய நாண், பட்டு வேஷ்டி, பட்டு சேலை, முகூா்த்த பொருள்களுடன் பாரம்பரிய மேளதாள, கைலாச வாத்தியங்களுடன் மாப்பிள்ளை அழைப்பும், மாலை மாற்றுதல் வைபவமும் நடைபெற்றன. பிறகு மீனாட்சி அம்மன் செங்கோல் ஏந்தி கைலாசநாதருடன் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் சாயல்குடி, கடலாடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கைலாசநாதா் திருப்பணிக் குழுவினா் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.