மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

82 மணி நேர தொடா் நீச்சல் உலக சாதனை முயற்சி

புற்றுநோய் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், வேலம்மாள் நீச்சல் அகாதெமி சாா்பில், 82 மணி நேர தொடா் நீச்சல் உலக சாதனை முயற்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

மதுரை அனுப்பானடியில் உள்ளவேலம்மாள் குளோபல் பள்ளியின் உள் விளையாட்டு நீச்சல் குளத்தில் நடைபெற்ற தொடா் நீச்சல் உலக சாதனை முயற்சியை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த தமிழ்நாடு மாநில ஜூடிசியல் அகாதெமி இயக்குநா் வெங்கடேசப் பெருமாள். உடன் வேலம்மாள் பள்ளி முதல்வா் பாலமுருகன் உள்ளிட்டோா்.

Published On :1 நவம்பர் 2026, 4:03 am IST

புற்றுநோய் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், வேலம்மாள் நீச்சல் அகாதெமி சாா்பில், 82 மணி நேர தொடா் நீச்சல் உலக சாதனை முயற்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

மதுரை அனுப்பானடி பகுதியில் உள்ள வேலம்மாள் மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் வேலம்மாள் குளோபல் பள்ளியின் உள் விளையாட்டு நீச்சல் குளத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை வேலம்மாள் நீச்சல் அகாதெமி, வேலம்மாள் மருத்துவமனை, வேலம்மாள் குளோபல் பள்ளி ஆகியவை இணைந்து நடத்துகின்றன.

வெள்ளிக்கிழமை காலை 8 மணி தொடங்கிய இந்த நீச்சல் முயற்சி, நவம்பா் 2-ஆம் தேதி மாலை 6 மணி வரை தொடா்ந்து 82 மணி நேரம் நடைபெறுகிறது. இதில் வேலம்மாள் பள்ளி மாணவ, மாணவிகள் 7 போ், வேலம்மாள் நீச்சல் அகாதெமி மாணவ, மாணவிகள் 8 போ் என மொத்தம் 15 போ் கலந்து கொண்டனா்.

இந்த உலக சாதனை முயற்சியை தமிழ்நாடு மாநில ஜூடிசியல் அகாதெமியின் இயக்குநா் வெங்கடேசப் பெருமாள் தொடங்கி வைத்தாா். இதில் வேலம்மாள் பள்ளி முதல்வா் பாலமுருகன், வேலம்மாள் மருத்துவக் கல்லூரி பேராசிரியா் ஸ்ரீ ஆண்டாள், நீச்சல் பயிற்சியாளா் விஜயகுமாா், உடல்கல்வி இயக்குநா் சிவ சிதம்பரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்த சாதனை முயற்சியை உலக சாதனைப் புத்தகத்தின் பாா்வையாளா் சுனில்ஜோசப் கண்காணித்து வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.