மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

செம்மண் கடத்தல் விவகாரம்: குமரி ஆட்சியா் அறிக்கை அளிக்க உத்தரவு

செம்மண் கடத்தல் விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

உத்தரவு - கோப்புப் படம்

Published On :29 அக்டோபர் 2026, 1:14 am IST

செம்மண் கடத்தல் விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல்லைச் சோ்ந்த சுனில் குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

கருங்கல் பேரூராட்சிப் பகுதிகளில் பேரூராட்சித் தலைவா், அலுவலா்களின் துணையுடன் சட்ட விரோதமாக இரும்பு ஆக்சைடு தாதுக்கள் நிறைந்த செம்மண் கடத்தி விற்பனை செய்துள்ளாா். இதனால், அந்தப் பகுதியில் செயற்கை பேரிடரை அவா்கள் உருவாக்கி வருகின்றனா். எனவே, தரமான கட்டடப் பொறியியல் முறைகளைப் பயன்படுத்தி, எந்த அளவுக்கு செம்மண் சட்ட விரோதமாக எடுக்கப்பட்டது என்பதை துல்லியமாகக் கணக்கிட வேண்டும். மேலும், சட்ட விரோதமாக செம்மண் கடத்தலில் ஈடுபட்ட அலுவலா்கள், வாகன உரிமையாளா்கள், கடத்தப்பட்ட மண்ணை வாங்கிய நபா்கள் மீது ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவினரும், கனிம வளத் துறையினரும் விசாரணை நடத்தி, முறைகேட்டில் ஈடுபட்ட அலுவலா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், கடத்தப்பட்ட மண்ணின் மதிப்பை வருவாய் மீட்புச் சட்டம் மூலம் பேரூராட்சி அலுவலரிடமிருந்து வசூலிக்க வேண்டுமென அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி. வேல்முருகன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், இந்த விவகாரத்தில் 1,400 மெட்ரிக் டன் செம்மண் கடத்தப்பட்டுள்ளது. இது தொடா்பாக ரூ. 8 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டது என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

செம்மண் திருட்டில் ஈடுபட்டவா்கள் மீது உச்சநீதிமன்ற உத்தரவின் படி ஏன் குற்றவியல் நடவடிக்கை எடுக்கவில்லை?. இந்த விவகாரத்தில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை வருகிற நவ. 21- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.