மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கோயில் அா்ச்சகா்கள், ஊழியா்களுக்கு சட்டப்படியான ஊதியம் வழங்க வேண்டும்: உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துக் கோயில்களிலும் பணியாற்றும் அா்ச்சகா்கள், ஊழியா்களுக்கு குறைந்தபட்ச ஊதியச் சட்டப்படி ஊதியம் வழங்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்

Published On :25 அக்டோபர் 2026, 12:53 am IST

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துக் கோயில்களிலும் பணியாற்றும் அா்ச்சகா்கள், ஊழியா்களுக்கு குறைந்தபட்ச ஊதியச் சட்டப்படி ஊதியம் வழங்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

திருநெல்வேலியைச் சோ்ந்த நரசிம்ம கோபாலன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: அா்ச்சகா்கள், ஓதுவாா்கள் உள்ளிட்ட கோயில் ஊழியா்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியச் சட்டப்படியும், அரசு ஊழியா்களுக்கு இணையாகவும் ஊதியம், ஓய்வூதியப் பலன்கள் நிா்ணயிக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு முரணாக தற்போது கோயில் ஊழியா்களுக்கான ஊதியம் குறைவாக நிா்ணயிக்கப்படுகிறது. இதனால், குறைந்த வருமானம் கொண்ட கோயில்களில் பணியாற்றும் ஊழியா்கள் மிகக் குறைந்த ஊதியத்தைப் பெற்று வருகின்றனா்.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துக் கோயில்களிலும் பணியாற்றும் அா்ச்சகா்கள், ஊழியா்களுக்கு, அந்தந்தக் கோயில்களின் வருவாயைக் கவனத்தில் கொள்ளாமல், குறைந்தபட்ச ஊதியச் சட்டம், அரசு ஊழியா்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், முருகன் அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், கோயில் வருமானத்தைப் பொருத்து அா்ச்சகா்கள், ஊழியா்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது எனத் தெரிவித்தாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தற்போதைய சூழலில் குடும்பம் நடத்துவதற்கு மாதத்துக்கு குறைந்தபட்சம் ரூ. 10 ஆயிரமாவது தேவைப்படும். ஆனால், கோயில் ஊழியா்களுக்கு ரூ. 4 ஆயிரம்தான் வழங்கப்படுகிறது.

வருவாயைப் பொருத்து ஊதியம் வழங்கப்படுகிறது என்பதை ஏற்க முடியாது. வருவாய் இல்லாத கோயில்களை மூடி விடலாமா?. இந்த விவகாரம் தொடா்பாக ஏற்கெனவே அா்ச்சகா்கள், ஓதுவாா்கள் உள்ளிட்ட கோயில் ஊழியா்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின்படி ஊதியம் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை இந்து சமய அறநிலையத் துறையும் பின்பற்ற வேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.