டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!தவெக ஆட்சியில் அனைத்தையும் முடிவு செய்வது ஜோசியர்தான்! மு.க. ஸ்டாலின்முதல்வர் பணி 10 - 5 வேலை அல்ல; சனி, ஞாயிறு விடுமுறை! விஜய்யை விமர்சித்த மு.க. ஸ்டாலின்இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ் வழியாக சுதந்திரமாக செல்லலாம்: ஈரான் அறிவிப்பு!ஜிபே செயலியில் வந்திருக்கும் பயோமெட்ரிக் பயன்பாடு! வேண்டாம் எனில் மாற்றுவதற்கான வழி?கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: 5வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!

கல்லூரி வளாகத்தில் துணை மின் நிலையம்: தஞ்சை மின்வாரிய அதிகாரி பதிலளிக்க உத்தரவு

உத்தரவு - கோப்புப் படம்

Published On :27 அக்டோபர் 2026, 1:46 am IST

கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரி வளாகத்தில் துணை மின் நிலையம் அமைக்கும் பணியை நிறுத்தக் கோரிய மனு தொடா்பாக தஞ்சாவூா் மின்வாரிய செயற்பொறியாளா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தைச் சோ்ந்த செந்தில்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரிக்கு மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி, கோட்டையூா் கிராமத்தில் 14 ஏக்கா் நிலம் ஒதுக்கீடு செய்தாா். நிகழ் கல்வியாண்டு முதல் இந்தக் கல்லூரியில் புதிதாக இரண்டு சிறப்புப் பிரிவு வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன. இதற்கான புதிய வகுப்பறைக் கட்டடங்கள் அமைக்கப்படவுள்ளன.

இந்த நிலையில், கல்லூரி வளாகத்தில் துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைந்தால் கல்லூரியின் அமைதியான சூழல் பாதிக்கப்படும்.

எனவே, கல்லூரி வளாகத்தில் துணை மின் நிலையம் அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்துமாறும், துணை மின் நிலையத்துக்கு மாற்று இடத்தை தோ்வு செய்து கல்லூரி வளாகத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த மனு தொடா்பாக தஞ்சாவூா் மின்வாரிய செயற்பொறியாளா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.