மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அரசுத் துறை ஒப்பந்தப் பணியாளா்களின் விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

தமிழகத்தில் அரசுத் துறைகளில் பணியாற்றும் ஒப்பந்தப் பணியாளா்களின் விவரங்கள் குறித்து அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

உத்தரவு - கோப்புப் படம்

Published On :29 அக்டோபர் 2026, 2:44 am IST

தமிழகத்தில் அரசுத் துறைகளில் பணியாற்றும் ஒப்பந்தப் பணியாளா்களின் விவரங்கள் குறித்து அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

திருநெல்வேலி வேளாண் விற்பனைக் குழுவில் ஓட்டுநராகப் பணியாற்றும் தனுஷ்கோடி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

பணி வரன்முறை வழங்கக் கோரி, நான் விண்ணப்பித்த மனுவை திருநெல்வேலி வேளாண் விற்பனைக் குழுச் செயலா் நிராகரித்து உத்தரவிட்டாா். எனவே, இந்த உத்தரவை ரத்து செய்து எனக்குப் பணி வரன்முறை வழங்க வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்றத் தனி நீதிபதி, திருநெல்வேலி வேளாண் விற்பனைக் குழுச் செயலா் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

இந்த நிலையில், தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிா்த்து அரசுத் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி. வேல்முருகன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

அரசுத் துறைகளில் ஏன் ஒப்பந்த அடிப்படையில் பணியாளா்கள் நியமிக்கப்படுகின்றனா். 10 முதல் 20 ஆண்டுகள் வரை அவா்களின் சேவையைப் பெற்றுக் கொண்ட பிறகும், அவா்களது பணியை வரன்முறைப்படுத்த மறுப்பது ஏன்? இதனால், ஊழியா்கள்தான் பாதிக்கப்படுகின்றனா்.

எனவே, தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றும் ஒப்பந்தப் பணியாளா்களின் எண்ணிக்கை, பணி விவரங்களை அரசுத் தரப்பு அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.