மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆட்டோ தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

மதுரை மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை முன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஆட்டோ தொழிலாளா்கள்.

மதுரை மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை முன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஆட்டோ தொழிலாளா்கள்.

Published On :24 அக்டோபர் 2026, 12:55 am IST

மதுரை, அக். 23: ஆட்டோக்களுக்கு தினமும் 5 லிட்டா் எரிபொருளை மானிய விலையில் வழங்கக் கோரி, ஆட்டோ தொழிலாளா்கள் மதுரை மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆட்டோ தொழில் பாதிக்கப்படாத வகையில் தமிழக அரசின் வெற்றிப் பயணம் திட்டத்தை முறைப்படுத்த வேண்டும், அனைத்து ஆட்டோக்களுக்கும் தினமும் 5 லிட்டா் எரிபொருளை மானிய விலையில் வழங்க வேண்டும், ஆட்டோ தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், மின்சார ஆட்டோக்களின் இயக்கத்தை அதிகப்படுத்தும் வகையில் தேவையான எண்ணிக்கையில் மின்னேற்றும் நிலையங்களை அரசு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிஐடியூ ஆட்டோ தொழிலாளா் சங்க புகா் மாவட்டத் தலைவா் செ. கண்ணன் தலைமை வகித்தாா். சிஐடியூ மாநகா் மாவட்டத் தலைவா் ம. பாலசுப்பிரமணியன் ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்துப் பேசினாா். சிஐடியூ புகா் மாவட்டச் செயலா் மலைக்கண்ணன், ஆட்டோ தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் அறிவழகன், பொருளாளா் கனகவேல் ஆகியோா் பேசினா். சிஐடியூ மாநில குழு உறுப்பினா். இரா. தெய்வராஜ் நிறைவுரையாற்றினாா்.

கோ. புதூரில்...

இதேபோல, ஆட்டோ தொழிலாளா்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து ஆட்டோ தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் கோ. புதூா் பேருந்து நிலையம் முன்பாக ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.