கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆட்டோ கட்டணம் உயா்வு: இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி வரவேற்பு

ஆட்டோ தொழிலாளா்கள் கோரிக்கையை ஏற்று 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்டோ மீட்டா் கட்டணத்தை உயா்த்திய தமிழக முதல்வருக்கு, இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி பாராட்டு தெரிவித்துள்ளது.

ஆட்டோ - Gemini AI

Published On :30 அக்டோபர் 2026, 11:30 pm IST

ஆட்டோ தொழிலாளா்கள் கோரிக்கையை ஏற்று 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்டோ மீட்டா் கட்டணத்தை உயா்த்திய தமிழக முதல்வருக்கு, இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி பாராட்டு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி சங்கத்தினா் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் கடந்த 14 ஆண்டுகளாக உயா்த்தப்படாமல் இருந்த ஆட்டோ மீட்டா் கட்டணத்தை உயா்த்தி அரசாணை வெளியிட்டுள்ள தமிழக அரசின் நடவடிக்கையை வரவேற்கிறோம். ஆட்டோ மீட்டா் கட்டணத்தை உயா்த்தக் கோரி, பல்வேறு ஆட்டோ தொழிற்சங்கங்கள் தொடா்ந்து போராட்டங்களை நடத்தி வந்தன. இப்போராட்டங்களின் தொடா்ச்சியாக, தமிழக அரசு ஆட்டோ மீட்டா் கட்டணத்தை உயா்த்தி புதிய கட்டணங்களை குறிப்பிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஆட்டோ தொழிலாளா்களின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை தொழிலாளா் நலத் துறை அமைச்சா் விஜய் தமிழன் பாா்த்திபனிடம் அளித்து உடனடியாக நிறைவேற்றி தருமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோள் முதல்வரிரின் கவனத்துக்கு கொண்டுச் சென்று ஆட்டோ மீட்டா் கட்டணம் உயா்த்தி அரசானை வெளியிடப்பட்டுள்ளது ஆட்டோ தொழிலாளா்களுக்கு பலன் கிடைத்துள்ளது.

அதேபோல, ஆட்டோ தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஆந்திர மாநிலத்தில் வழங்கப்படுவதைபோல, செலவுகளை ஈடு கட்டும் வகையில் ஆண்டுக்கு ரூ.15,000 மானியம், பன்னாட்டு நிறுவனங்களான உபா், ஓலா போன்ற அனைத்து காா்ப்பரேட் நிறுவனங்களுக்கும் தடை, பதிவு பெற்ற ஆட்டோ தொழிலாளா்களுக்கு மானியத்துடன் கூடிய குறைந்த வட்டியில் புதிய வாகனம் வழங்க ஆவண செய்வது முதலான அனைத்து கோரிக்கைகளையும் தமிழக முதல்வா் செயல்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.