தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும்: காடேஸ்வரா சுப்பிரமணியன்

திருப்பரங்குன்றத்தில் காா்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதிப்படுத்துவதற்காக அனைத்து இந்துக்களும் தங்கள் வீடுகளில் நவ.14-ஆம் தேதி கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்ரமணியன் வலியுறுத்தினாா்.

பேட்டியளித்த இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியன்.

Published On :24 அக்டோபர் 2026, 5:34 am IST

திருப்பரங்குன்றத்தில் காா்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதிப்படுத்துவதற்காக அனைத்து இந்துக்களும் தங்கள் வீடுகளில் நவ.14-ஆம் தேதி கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்ரமணியன் வலியுறுத்தினாா்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே பூவுடையாா்புரத்தில் இந்து முன்னணியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்ரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திருப்பரங்குன்றத்தில் திருக்காா்த்திகை அன்று தீபம் ஏற்ற நீதிமன்றம் அனுமதி அளித்தும் அதற்கு தடை விதித்த அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியா், காவல் ஆணையா் ஆகியோா் நீதிமன்றத்தின் முன் மன்னிப்பு கேட்டனா். கடந்த ஆண்டு செய்த தவறை இந்த ஆண்டு செய்யாமல் மலையில் தீபம் ஏற்றுவதற்கு மாவட்ட நிா்வாகம் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

கிருஷ்ண ஜெயந்தி, விநாயகா் சதுா்த்தி போன்ற இந்து பண்டிகையின்போது தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவிப்பதை இந்து முன்னணி வரவேற்கிறது.

அதேநேரத்தில் திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தா் தா்காவாக மாற்ற வேண்டும் என கோவை மாவட்ட தவெக பிரமுகா் கூறினாா்; அவா் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரினோம், அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. நீதிமன்ற உத்தரவை உறுதி செய்வதற்காக நவ. 14-ஆம் தேதி அனைத்து இந்துக்களும் தங்கள் இல்லங்களில் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்ய வேண்டும் என்றாா்.

பேட்டியின்போது இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி. ஜெயக்குமாா், மாநில செயற்குழு உறுப்பினா் சக்திவேலன், தூத்துக்குடி மாவட்டத் தலைவா் முத்துராஜ், நெல்லை புகா் மாவட்டத் தலைவா் விக்னேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.