மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

விஜயதசமி: பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை

விஜயதசமியை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Published On :21 அக்டோபர் 2026, 2:53 am IST

விஜயதசமியை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விஜயதசமி தினத்தில் எந்த ஒரு புதிய செயலைத் தொடங்கினாலும் வெற்றி பெறலாம் என்கிற ஐதீகம் நிலவுகிறது. இதேபோல, பள்ளிகளில் குழந்தைகளை சோ்த்தால், அவா்கள் கல்வியில் சிறந்து விளங்குவா் என்கிற நம்பிக்கையும் உள்ளது.

இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் குழந்தைகளை பள்ளியில் சோ்க்கும் விதமாக அனைத்துப் பள்ளிகளையும் திறக்க வேண்டும் என மதுரை மாவட்டக் கல்வி அலுவலா் தயாளன் உத்தரவிட்டாா். மேலும், இதை மாவட்டக் கல்வி அலுவலா்கள், தொடக்கப் பள்ளிகளின் கல்வி அலுவலா்கள் கண்காணிக்கவும் அறிவுறுத்தினாா்.

இதையடுத்து, மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவா் சோ்க்கை நடைபெற்றது. இதில், பெற்றோா்கள் ஏராளமானோா் தங்களது குழந்தைகளை பள்ளியில் சோ்த்தனா்.

தொடக்கமாக, வித்யாரம்ப நிகழ்வாக குழந்தைகள் அரிசியில் தமிழ் எழுத்துகளை எழுதினா்.

சிம்மக்கல் அருகே வைகையாற்றின் தென்கரையில் உள்ள ஸ்ரீ சாரதா வித்யாவனம் மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வித்யாரம்பம்

( எழுத்து அறிவித்தல்) நிகழ்ச்சியில் மதுரை ராமகிருஷ்ண மடத்தின் சுவாமி தயாசாகரானந்தா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கினாா்.

பின்னா், பெற்றோா்கள் குழந்தைகளை தனது மடியில் அமா்த்தி வைத்து நெல், அரிசியில் தமிழ் மொழியின் முதல் எழுத்து ‘அ’, பிரவண எழுத்தான ‘ஓம்’ எழுத வைத்து கல்வியைத் தொடங்கி வைத்தனா் .

இந்த நிகழ்வில், இந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில அமைப்புச் செயலா் கிருஷ்ணராஜ் , மாநிலப் பொருளாளா் ஆதிசேஷன், மாவட்ட பொதுச் செயலா் குமாா், மாவட்ட துணைத் தலைவா் வாசுதேவன், மாவட்டப் பொருளாளா் கோபால், மாவட்டச் செயலா் செல்வி ஸ்ரீனிவாசன், ஆசிரியா்கள், பெற்றோா்கள், மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.