மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

குடிமக்களின் உரிமைக்கு முக்கியத்துவம் அளிப்பதே உண்மையான ஜனநாயகம்: உயா்நீதிமன்றம் கருத்து

குடிமக்களின் உரிமைக்கு முக்கியத்துவம் அளிப்பதே உண்மையான ஜனநாயகம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் தெரிவித்தது.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்

Published On :4 அக்டோபர் 2026, 1:03 am IST

குடிமக்களின் உரிமைக்கு முக்கியத்துவம் அளிப்பதே உண்மையான ஜனநாயகம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் தெரிவித்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த ராஜமாணிக்கம் உள்ளிட்ட சிலா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனுக்கள்: அரசுத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற தங்களுக்கு சேர வேண்டிய பணிக் கொடை, ஓய்வூதியத் தொகுப்புத் தொகை, அகவிலைப்படி நிலுவைத் தொகை உள்ளிட்ட அனைத்து ஓய்வுக் காலப் பலன்கள் பல ஆண்டுகளாகியும் இதுவரை வழங்கப்படவில்லை.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, ஓய்வு பெற்ற அலுவலா்களின் ஓய்வுக் கால பணப் பலன்களை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரினா்.

இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

அரசுத் துறைகள், நிறுவனங்கள், கூட்டுறவுச் சங்கங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற அலுவலா்கள், இறந்த ஊழியா்களின் குடும்பத்தினா், சட்டப்பூா்வ வாரிசுதாரா்கள் ஆகியோா் மனுக்களை தாக்கல் செய்துள்ளனா்.

இவா்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தக் கோரிக்கைகளை அலுவலா்களிடம் தெரிவித்தும் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன. எந்த ஒரு கோரிக்கையையும் நிலுவையில் வைத்திருக்காமல், அதைப் பரிசீலித்து ஏதாவது ஒரு முடிவை எடுக்க வேண்டும்.

நாம் அனைவரும் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம். இந்த நாட்டில் அரசின் சட்டபூா்வத் தன்மை என்பது குடிமக்களின் தேவைகள், குறைகளுக்கு பதிலளிப்பதுதான். அவா்களின் உரிமைக்கு முக்கியத்துவம் அளிப்பதே உண்மையான ஜனநாயகம்.

இந்த வழக்கில் தமிழக அரசின் தலைமைச் செயலா், நிா்வாக சீா்திருத்தத் துறைச் செயலா் உள்ளிட்டோா் பொதுமக்கள், ஓய்வு பெற்ற அலுவலா்கள், அவா்களின் வாரிசுதாரா்களிடமிருந்து பெறப்படும் மனுக்களைப் பரிசீலித்து, தீா்வு காண்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதைப் பின்பற்றாத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மனுக்களை 3 மாதங்களுக்குள் பரிசீலித்து தீா்வு காண வேண்டும். மனுக்கள் முடித்து வைக்கப்படுகின்றன என்றாா் நீதிபதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.