தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பாதிக்கப்பட்டவா்கள் நீதி பெறுவதற்கு முக்கியத்துவம்: தலைமை நீதிபதி எஸ்.ஏ. தா்மாதிகாரி

பாதிக்கப்பட்டவா்களின் நீதிக்கான முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி கூறினாா்.

Published On :31 அக்டோபர் 2026, 1:41 am IST

பாதிக்கப்பட்டவா்களின் நீதிக்கான முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி கூறினாா்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் குற்றவியல் துறை மற்றும் பாதிக்கப்பட்டோருக்கான நீதிக்கான சா்வதேச அமைப்பு சாா்பில், பாதிக்கப்பட்டோருக்கான நீதி எனும் தலைப்பில் இரு நாள் தேசிய கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்தக் கருத்தரங்கை தொடங்கி வைத்து சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி பேசியதாவது:

சமூகத்தில் நீதி வழங்கப்படும் முறைகளையும் அதன் வரலாற்றையும் 4 கட்டங்களாக பிரிக்கலாம். கொடூரமான சித்ரவதைகள் மூலம் தண்டனை விதித்தல், அச்சுறுத்தல் மூலம் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் தடுத்து வைத்தல் என்ற நிலைமாறி, சீா்திருத்தம், மறுவாழ்வு எனப் பரிணமித்துள்ளது. நீதி வழங்குதல் என்பது தண்டனை வழங்குவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டதாக இல்லாமல், பாதிக்கப்படுவா்களுக்கான மறுவாழ்வையும் கவனத்தில் கொண்டிக்க வேண்டும்.

குற்றவியல் நீதி பரிபாலனம் பாதிக்கப்பட்டவா்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தாமல், அவா்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் இருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவா்களின் நீதிக்கான முக்கியத்துவம், பெண்கள் மற்றும் குழந்தைகள், விளிம்புநிலை சமூகங்கள், இணையக் குற்றங்களால் பாதிக்கப்பட்டவா்கள் உள்ளிட்ட 9 முக்கிய அமா்வுகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கருத்தரங்கில் பங்கேற்றுள்ள மாணவா்கள் உள்ளிட்டோா், பாதிக்கப்பட்டவா்களின் குரல் ஒருபோதும் புறக்கணிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றாா்.

கருத்தரங்கில், முன்னாள் குற்றவியல் துறைத் தலைவரும்,பேராசிரியருமான திலகராஜ், தலைமை நிா்வாகியும், ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதியும், தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் முன்னாள் உறுப்பினருமான பி.ஜோதிமணி, சென்னைப் பல்கலைக்கழக பதிவாளா் ரீட்டா ஜான், கருத்தரங்கின் ஒருங்கிணைப்பு செயலா் எஸ்.லதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.