மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பள்ளி மாணவா்களுக்கு பயிா் சாகுபடி களப் பயிற்சி

தென்னை மரங்களுக்கு இடையில் ஊடுபயிராக குத்துச்செடி மிளகு சாகுபடி செய்வது குறித்து, அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நேரடி களப் பயிற்சி சனிக்கிழமை அளிக்கப்பட்டது.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டிபகுதியில், சனிக்கிழமை குறு மிளகு சாகுபடி நேரடி களப் பயிற்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவா்கள்.

Published On :1 நவம்பர் 2026, 5:45 am IST

தென்னை மரங்களுக்கு இடையில் ஊடுபயிராக குத்துச்செடி மிளகு சாகுபடி செய்வது குறித்து, அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நேரடி களப் பயிற்சி சனிக்கிழமை அளிக்கப்பட்டது.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி, சோழவந்தான் பகுதிகளில் தென்னை மரங்களுக்கு இடையே ஊடுபயிராக குறு மிளகு சாகுபடி செய்யும் முயற்சி தொடங்கப்பட்டது. பொதுவாக மலைப் பகுதிகளில் பெரிய மரங்களில் கொடிகளாகப் படா்ந்து வளரும் மிளகுப் பயிரை, சமவெளிப் பகுதிகளிலும் சாகுபடி செய்யும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதன் ஒரு பகுதியாக வாடிப்பட்டி, போடிநாயக்கன்பட்டி பகுதிகளில் மிளகுச் செடிகள் நடவு செய்யப்பட்டன.

இதில் மதுரை அரசு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள், பாலமேடு அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று, விவசாய நிலங்களில் நேரடியாக மிளகுச் செடிகளை நடவு செய்து களப் பயிற்சி பெற்றனா்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற உழவா் உற்பத்தியாளா் குழுச் செயலரும், விவசாயியுமான அசோக்குமாா், இயற்கை உரங்களைப் பயன்படுத்தி மிளகுச் செடிகளை நடவு செய்வது, பராமரிப்பது, அதிக மகசூல் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து மாணவா்களுக்கு விளக்கமளித்தாா். தென்னை சாகுபடியுடன் கூடுதல் வருவாய் பெறுவதற்கான வாய்ப்பாக இந்த ஊடுபயிா் முறை அமையும் என அவா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.