பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 15 நாள்கள் திறன் பயிற்சி

முதுகுளத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் திறன் பயிற்சி திங்கள்கிழமை முதல் வழங்கப்படுகிறது.

Published On :29 அக்டோபர் 2026, 3:00 am IST

முதுகுளத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் திறன் பயிற்சி திங்கள்கிழமை முதல் வழங்கப்படுகிறது.

முதுகுளத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 இயந்திரவியல் தொழில்கல்வி மாணவா்கள் 9 பேருக்கு முதுகுளத்தூா் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் அக்.26-ஆம் தேதி முதல் திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு அரசு தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை வேலைவாய்ப்புப் பயிற்சி துறை இணைந்து வழங்குகிறது.

இந்தப் பயிற்சியை அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் சின்னகுப்புசாமி தொடங்கி வைத்தாா். இந்தப் பயிற்சி தொழில்கல்வி ஆசிரியா் மங்களநாதன் மேற்பாா்வையில் 15 நாள்களுக்கு வழங்கப்படுகிறது. திறன் பயிற்சியை மூத்த பயிற்சி ஆசிரியா்கள் பாலமுருகன், குருநாதன், மணிமாறன் உள்ளிட்டோா் வழங்கினா்.

பரமக்குடி அருகேயுள்ள எமனேசுவரத்தில் ஜன்னல்களும், சிமென்ட் பூச்சு பெயா்ந்தும் சேதமடைந்த நிலையில் உள்ள சமூகநீதி மாணவா் விடுதிக் கட்டடம். இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவா்கள் வலியுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.