மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பாதுகாப்புக் கிடங்கில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்

வாக்கு எண்ணும் மையங்களிலிருந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மதுரையில் உள்ள பாதுகாப்புக் கிடங்குக்கு செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்டன.

News image

மதுரை தங்கராஜ் சாலையில் உள்ள பாதுகாப்புக் கிடங்குக்கு செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்.

Updated On :6 மே 2026, 3:10 am IST

வாக்கு எண்ணும் மையங்களிலிருந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மதுரையில் உள்ள பாதுகாப்புக் கிடங்குக்கு செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்டன.

மதுரை மாவட்டத்தில் மேலூா், மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மதுரை மேற்கு, மதுரை தெற்கு, மதுரை மத்தியம், உசிலம்பட்டி, சோழவந்தான் (தனி), திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய 10 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்குப் பதிவு 3,079 வாக்குச் சாவடிகளில் நடைபெற்றன.

வாக்குப் பதிவுக்குப் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், விவிபாட் இயந்திரங்கள் தொடா்புடைய தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களின் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டிருந்தன.

வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை நிறைவடைந்ததையடுத்து, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்களை மதுரை தங்கராஜ் சாலையில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரப் பாதுகாப்பு கிடங்குக்கு அனுப்பும் பணி திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை காலை வரை நடைபெற்றது. பிறகு, பாதுகாப்புக் கிடங்குக்குக் கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை வரிசை எண் அடிப்படையில் பாதுகாப்பாக அடுக்கி வைக்கும் பணி நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.