ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பேரவை தொகுதிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டு ராமநாதபுரம் அருகே உள்ள அண்ணா பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி (தனி), முதுகுளத்தூா், ராமநாதபுரம், திருவாடானை ஆகிய நான்கு தொகுதிகளில் 11 லட்சத்து 29 ஆயிரத்து 733 வாக்காளா்கள் உள்ளனா். இவா்கள் 1,514 வாக்குச் சாவடிகளில் தங்களது வாக்குகளை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், காலை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கி மாலை 06 மணிக்கு நிறைவடைந்தது. இதன் பிறகு வாக்குச் சாவடிகளுக்குள் யாரும் அனுமதிக்கப்பட வில்லை. வாக்குப் பதிவு நேரம் நிறைவடைந்த பிறகு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்புடன் ராமநாதபுரம் அருகே உள்ள அண்ணா பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன.
ஆட்சியா் வாக்களிப்பு: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் சுவாா்ட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தாா். இதே போல, மாவட்ட ஆட்சியா் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள விவேகானந்த வித்யாலயா மெட்ரிக் உயா்நிலைப் பள்ளியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் தனது வாக்கை பதிவு செய்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாதுகாப்புக் கிடங்கில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்

வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு மையத்தில் இருப்புவைப்பு

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு ‘சீல்’

வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

