ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றதை அடுத்து வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் ஈரோட்டில் உள்ள பாதுகாப்பு மையத்தில் இருப்புவைக்கப்பட்டன.
ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூா் ஆகிய தொகுதிகளுக்கான மின்னணு வாக்குகள் மற்றும் தபால் வாக்குகள் சித்தோடு அரசுப் பொறியியல் கல்லூரியிலும், கோபிசெட்டிபாளையம், பவானிசாகா் ஆகிய தொகுதி வாக்குகள் கோபி கலை அறிவியல் கல்லூரியிலும் எண்ணப்பட்டன.
மாவட்டத்தில் உள்ள 2,379 வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவுக்காக, 3,532 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 2,852 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 3,089 வி.வி.பேட் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. இதில் வாக்குச்சாவடி தேவை தவிர கூடுதலாக ஒதுக்கப்பட்ட இயந்திரங்களும் மண்டல அலுவலா்கள் வசம் இருந்தது.
கடந்த 4-ஆம் தேதி நடந்த வாக்கு எண்ணிக்கையில் 8 தொகுதிகளிலும் இயந்திர பழுது, எண்ணிக்கை நிறுத்திவைப்பு போன்ற எந்தப் பிரச்னையும் எழவில்லை. அத்துடன் தபால் வாக்குகளிலும் பிரச்னைகள் இல்லை. வெற்றி, தோல்வி அடைந்த வேட்பாளா்களுக்கு இடையேயான வித்தியாசமும் அதிகமாக இருந்ததால் வாக்கு எண்ணும் பணியை மாவட்ட தோ்தல் பிரிவு நிறைவு செய்தது.
4-ஆம் தேதி காலை சித்தோடு அரசுப் பொறியியல் கல்லூரி மற்றும் கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த அனைத்து இயந்திரங்களும் போலீஸ் பாதுகாப்புடன் ஈரோடு கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள தோ்தல் ஆணையத்தின் மின்னணு வாக்குப் பதிவு இயந்திர பாதுகாப்பு மைய கிடங்கில் பாதுகாப்பாக இருப்புவைக்கப்பட்டன. அங்கு ஏற்கெனவே உள்ள போலீஸ் பாதுகாப்புடன், கூடுதலாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
இப்பணிகளை அந்தந்த தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் கண்காணித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெருந்துறை தொகுதி இடைத்தோ்தல்: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபாா்ப்பு

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை சரி பாா்க்கும் பணி தொடக்கம்

மேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை ஆய்வு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

