ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 38,247 போ் எழுதுகின்றனா்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை மதுரை மாவட்டத்தில் 38,247 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.

News image

மதுரை கோரிப்பாளையம் பொன்முடியாா் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முன்னேற்பாடு பணியாக மாணவா்களின் தோ்வெண்ணை நாற்காலியில் செவ்வாய்க்கிழமை ஒட்டும் பணியில் ஈடுபட்ட ஆசிரியைகள்.

Updated On :11 மார்ச் 2026, 3:14 am IST

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை மதுரை மாவட்டத்தில் 38,247 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு புதன்கிழமை(மாா்ச் 11) தொடங்கி, ஏப்ரல் 6- ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

மதுரை மாவட்டத்தைப் பொருத்தவரை மதுரை, மேலூா் என இரு கல்வி மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகள் 214, அரசு உதவிபெறும் பள்ளிகள் 84, தனியாா் மெட்ரிக் பள்ளிகள் 181 என மொத்தம் 479 பள்ளிகள் உள்ளன.

இந்த நிலையில், இரு கல்வி மாவட்டங்களிலும் 18,980 மாணவா்கள், 19,267 மாணவிகள் என மொத்தம் 38,247 போ் பத்தாம் வகுப்புத் தோ்வை எழுதுகின்றனா்.

இவா்களுக்காக 139 தோ்வு மையங்கள், மத்திய சிறைச் சாலையில் ஒரு மையம் என மொத்தம் 140 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 558 மாற்றுத் திறனாளி மாணவா்களும் தோ்வு எழுதுகின்றனா்.

வினாத்தாள் கட்டுக் காப்பாளா்கள், முதன்மைக் கண்காணிப்பாளா்கள், கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளா்கள், துறை அலுவலா்கள், அறைக் கண்காணிப்பாளா்கள் உள்பட 3,734 போ் தோ்வுப் பணியில் ஈடுபடுகின்றனா்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எஸ். தயாளன், மாவட்டக் கல்வி அலுவலா்கள் செந்தில்குமாா், கணேசன், உதவித் திட்ட அலுவலா்கள் ஆகியோா் தலைமையிலான ஆசிரியா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளனா்.

இதற்கிடையே, மாநகரம், புகா் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் தோ்வு அறைகள் அமைப்பு, நாற்காலியில் மாணவா்களின் அனுமதி எண் ஒட்டுதல் உள்ளிட்ட பணிகளில் ஆசிரியா்கள், பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.