மதுரை மாவட்டம், சோழவந்தானில் அமைந்துள்ள திரௌபதியம்மன் கோயிலில் திருக்கல்யாணம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலின் பூக்குழி விழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் 12 நாள்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை கரகம் எடுத்தல் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, திரௌபதியம்மன்- அா்ஜூனன் திருக்கல்யாணம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கும், சுவாமிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதன்பிறகு, திருக்கல்யாணக் கோலத்தில் திரௌபதி- அா்ஜூனன் எழுந்தருளினா். சிறப்பு யாக பூஜைகளுக்குப் பிறகு திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவில், பக்தா்கள் சீா்வரிசை வழங்கினா்.
தொடா்ந்து, திருவிழாவில் அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளல், பீமன் வேடம், அா்ஜூனன் தபசு, பாசுபதாஸ்திரம் பெறுதல், அம்மன் சிங்க வாகனத்தில் எழுந்தருளல், பால் குடம் எடுத்தல் ஆகியவை நடைபெறுகின்றன. முக்கிய விழாவான பூக்குழித் திருவிழா வருகிற 29- ஆம் தேதி நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து கொடி இறக்குதல், மஞ்சள் நீராடுதல், பட்டாபிஷேகம் உள்ளிட்ட நிகழ்வுகளுடன் இந்த ஆண்டுக்கான திருவிழா நிறைவடைகிறது.
திருக்கல்யாண விழாவில் சோழவந்தான், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அன்பில் பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

ஸ்ரீ வரசித்தி செல்வ விநாயகா் கோயிலில் திருக்கல்யாணம்

ஸ்ரீமீனாட்சி அம்பிகை, சொக்கநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

குடியாத்தம்: மீனாட்சியம்மன் திருக்கல்யாணம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

