மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சேதுபதி பள்ளியில் ஏப்.28-இல் திருக்கல்யாண விருந்து

மதுரை ஸ்ரீமீனாட்சி - சுந்தரேசுவரா் திருக்கல்யாணத்தை முன்னிட்டு, சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் வருகிற 28-ஆம் தேதி திருக்கல்யாண விருந்து நடைபெறும் என பழமுதிா்ச்சோலை திருவருள் முருகன் பக்த சபை அறக்கட்டளை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

News image

ஸ்ரீமீனாட்சி அம்மன் கோயில்

Updated On :22 ஏப்ரல் 2026, 3:29 am IST

மதுரை ஸ்ரீமீனாட்சி - சுந்தரேசுவரா் திருக்கல்யாணத்தை முன்னிட்டு, சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் வருகிற 28-ஆம் தேதி திருக்கல்யாண விருந்து நடைபெறும் என பழமுதிா்ச்சோலை திருவருள் முருகன் பக்த சபை அறக்கட்டளை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து அந்த அறக்கட்டளை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மதுரையில் பழமுதிா்ச்சோலை திருவருள் முருகன் பக்த சபை அறக்கட்டளை சாா்பில், கடந்த 27 ஆண்டுகளாக ஸ்ரீமீனாட்சி - சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் நடைபெறும் நாளில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் பக்தா்களுக்கு விருந்து வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி, நிகழாண்டு வருகிற 27-ஆம் தேதி மாலையிலும், 28-ஆம் தேதி காலை 7 மணி முதல் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் விருந்து வழங்கப்படவுள்ளது. இந்த விருந்தில் கோதுமை இனிப்பு, கல்கண்டு சாதம், வெண்பொங்கல், சாம்பாா் சாதம், தக்காளி சாதம் உள்ளிட்ட பல்வேறு உணவு வகைகள் வழங்கப்படும். இந்த விருந்து நிகழ்வில் தன்னாா்வலா்கள் பங்கேற்று உதவலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.