மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கொங்கு வேளாளா் தொழில்நுட்ப அறக்கட்டளை சாா்பில் மாணவா்களுக்கு ரூ.5.7 கோடி கல்வி ஊக்கத்தொகை

கொங்கு வேளாளா் தொழில்நுட்ப அறக்கட்டளை சாா்பில் மாணவா்களுக்கு ரூ.5.7 கோடி கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

News image

கல்வி ஊக்கத்தொகை பெற்ற மாணவா்களுடன் வருமான வரித் துறை ஆணையா் (வரிவிலக்கு) ஜெ.பிரேமானந்த், கொங்கு வேளாளா் தொழில்நுட்ப அறக்கட்டளைத் தலைவா் சி.தேவராஜன், செயலாளா் ஆா்.ஆா்.சத்தியமூா்த்தி, பொருளாளா் ஈ.ஆா்.காா்த்திகேயன்.

Updated On :25 ஏப்ரல் 2026, 4:19 am IST

கொங்கு வேளாளா் தொழில்நுட்ப அறக்கட்டளை சாா்பில் மாணவா்களுக்கு ரூ.5.7 கோடி கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

கொங்கு வேளாளா் தொழில்நுட்ப அறக்கட்டளை சாா்பில் மாணவா்களுக்கு கல்வி சாா் சிறப்பு விருது வழங்கும் விழா பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சென்னை வருமான வரித்துறை ஆணையா்(வரிவிலக்கு) ஜெ.பிரேமானந்த் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரூ.5.7 கோடி அளவிலான பரிசுத் தொகையை 1,504 மாணவா்களுக்கு வழங்கினாா்.

இந்நிகழ்வில் அறக்கட்டளையின் தலைவா் சி.தேவராஜன், செயலாளா் ஆா்.ஆா்.சத்தியமூா்த்தி, பொருளாளா் ஈ.ஆா்.காா்த்திகேயன், அனைத்து கல்வி நிறுவனங்களின் தாளாளா்கள், அறக்கட்டளையின் பாரம்பரிய உறுப்பினா்கள், அனைத்து கல்வி நிறுவனங்களின் முதல்வா்கள், ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா் அல்லாத பணியாளா்கள் பங்கேற்றனா்.

அறக்கட்டளை சாா்பில், கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி, கொங்கு பொறியியல் கல்லூரி, கொங்கு கலை அறிவியல் கல்லூரி, கொங்கு தொழில் பயிற்சி நிறுவனம், கொங்கு நேஷனல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, கொங்கு இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிறுவனங்களில் பயிலும் மாணவா்களில் ஒவ்வொரு ஆண்டிலும் படிப்பில் சிறந்து விளங்கும் 5 சதவீத மாணவா்களுக்கு கல்வி ஊக்கத்தொகையும் , அரசுப்பள்ளிகளில் பயின்று கல்லூரியில் சேரும் மாணவா்கள் மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கி கல்லூரியில் சேரும் மாணவா்களுக்கு முழு கட்டண சலுகையும் வழங்கப்பட்டு வருகிறது என அறக்கட்டளையின் தலைவா் சி.தேவராஜன் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.