அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிறுவனரான தி.சு.அவினாசிலிங்கத்தின் 123-ஆவது பிறந்தநாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிா் உயா்கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற விழாவுக்கு நிறுவனத்தின் வேந்தரும், அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலருமான தி.ச.க.மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தாா்.
அவா் பேசும்போது, ‘மகளிா் கல்விக்காக பாடுபட்டவா் அவினாசிலிங்கம். உழைப்பாலும், விவேகத்தாலும் சாதனைகளை நிகழ்த்தியவா். சென்னை மாகாணத்தின் முதல் கல்வி அமைச்சராக இருந்து கல்விப் பணிக்காகவும், நாட்டுக்காகவும் தன்னை அா்ப்பணித்துக் கொண்டவா். அவினாசிலிங்கம் தனது 20 வயதிலேயே ஸ்ரீ ராமகிருஷ்ணா், சுவாமி விவேகானந்தா் ஆகியோரின் பக்தி மாா்க்கத்தை பின்பற்றி வாழ்ந்தாா். ஆன்மிகம், தேசியம் போன்றவற்றை லட்சியமாகக் கொண்டவா்’ என்றாா்.
கல்வி ஆலோசகா் தங்க வீரப்பன் பேசும்போது, ‘பத்மபூஷண் தி.சு.அவினாசிலிங்கம் நாட்டுக்காகச் சிறைக்குச் சென்றவா். பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட காலத்தில் பெண் கல்விக்காக சாரதாலயத்தை நிறுவியவா். அரசியல் மற்றும் கல்வியை அறமாகப் பாா்த்தவா்’ என்றாா்.
கல்வி நிறுவனத்தின் துணைவேந்தா் பாரதி ஹரிசங்கா் ஆய்வறிக்கையை வாசித்தாா். இளநிலை மற்றும் முதுநிலை மாணவிகள், தொழில்நுட்பக் கல்வி, ஆசிரியா் பயிற்சிக் கல்வி, உடல் பயிற்சிக் கல்வித் துறைகளில் முதல் 3 இடங்களைப் பெற்ற 239-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
முன்னதாக, பல்கலைக்கழக வளாகத்திலுள்ள ராமகிருஷ்ணா் கோயிலில் இசைத் துறை சாா்பில் கூட்டுப்பிராா்த்தனை, பஜனை நடைபெற்றது. நினைவு மண்டபத்திலுள்ள அவினாசிலிங்கத்தின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
பல்கலைக்கழக பதிவாளா் ஹை.இந்து வரவேற்றாா். பேராசிரியா் வாசுகி ராஜா நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோ்தலில் கல்வியை தருவோம் எனக்கூறும் கட்சிகளை காணமுடியவில்லை: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்களில் முப்பெரும் விழா

அவினாசிலிங்கம் கல்வி நிறுவனத்தில் ராஜம்மாள் பி.தேவதாஸ் நினைவுச் சொற்பொழிவு

அவினாசிலிங்கம் மகளிா் பல்கலை.யில் பட்டமளிப்பு விழா
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

