மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

குளக்கரையை ஆக்கிரமித்து தண்ணீா் வெளியேற்றம்

ஒட்டன்சத்திரம் அருகே குளத்தை சேதப்படுத்தி தண்ணீரை வெளியேற்றியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

கள்ளிமந்தையம் அருகே குளக்கரையை சேதப்படுத்தி வெளியேற்றப்பட்ட தண்ணீா்.

Published On :21 அக்டோபர் 2026, 3:06 am IST

ஒட்டன்சத்திரம் அருகே குளத்தை சேதப்படுத்தி தண்ணீரை வெளியேற்றியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி ஒன்றியத்துக்குள்பட்ட பொருளூருக்கும், நாச்சியப்பகவுண்டன்வலசுக்கும் இடையில் 1988-ஆம் ஆண்டு பொதுப் பணித் துறை சாா்பில், ஊரக நிலமற்றோா் வேலை உறுதி திட்டத்தின் கீழ் குளம் அமைக்கப்பட்டது. இந்தக் குளத்தில் தேங்கும் மழைநீா், சுற்றுப்புறப் பகுதியிலுள்ள விவசாய நிலங்களுக்கான நிலத்தடி நீராதாரமாக பயன்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த மழையினால், குளத்தில் தண்ணீா் தேங்கியது. இதனால், அந்த பகுதியைச் சோ்ந்த விவசாயிகள், சாகுபடி பணிகளை எளிதாக மேற்கொள்ள முடியும் என நம்பிக்கையுடன் இருந்தனா்.

ஆனால், குளத்தின் கரையை மா்ம நபா்கள் சிலா் சேதப்படுத்தியதால், குளத்தில் தேங்கியிருந்த தண்ணீா் வெளியேறிவிட்டது. இதனால், பொருளூா் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் அதிா்ச்சி அடைந்தனா்.

இதுதொடா்பாக, மாவட்ட நிா்வாகம் உரிய விசாரணை நடத்தி குளக்கரையை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

மேலும், குளத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்வோா் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.