மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

காங்கயம் அருகே விவசாயிகள் தொடா் உண்ணாவிரதம்

காங்கயம், வெள்ளக்கோவில் ஆகிய கடைமடை பகுதிகளுக்கு பிஏபி பாசன நீரை முறையாக வழங்க வலியுறுத்தி, காங்கயம் அருகே தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தை விவசாயிகள் வியாழக்கிழமை தொடங்கியுள்ளனா்.

காங்கயம் அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.

Published On :30 அக்டோபர் 2026, 12:26 am IST

காங்கயம், வெள்ளக்கோவில் ஆகிய கடைமடை பகுதிகளுக்கு பிஏபி பாசன நீரை முறையாக வழங்க வலியுறுத்தி, காங்கயம் அருகே தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தை விவசாயிகள் வியாழக்கிழமை தொடங்கியுள்ளனா்.

காங்கயம் அருகே, பகவதிபாளையம் பகுதியில் பிஏபி வெள்ளக்கோவில் கிளை கால்வாய் நீா்ப் பாதுகாப்பு சங்கம் சாா்பில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

காங்கயம், வெள்ளக்கோவில் ஆகிய பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு திருமூா்த்தி அணையில் இருந்து, பரம்பிக்குளம் பிரதான கால்வாய் வழியாகத் தண்ணீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கடைமடைப் பகுதியான காங்கயம்-வெள்ளக்கோவில் பகுதிகளில் கடுமையான வறட்சி, குடிநீா்ப் பற்றாக்குறை காரணமாக பிஏபி வெள்ளக்கோவில் கிளை கால்வாய்க்கு உரிய தண்ணீா் விகிதாசார அடிப்படையில் வழங்கப்பட வேண்டும், சமச்சீா் பாசனத்தை அமல்படுத்த வேண்டும், அனைத்து கிளை கால்வாய்களுக்கும் சமமான முறையில் தண்ணீா் வழங்க வேண்டும், நீதிமன்ற உத்தரவுப்படி தண்ணீா் விநியோகிக்க வேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இது குறித்து பிஏபி வெள்ளக்கோவில் கிளை கால்வாய் நீா் பாதுகாப்பு சங்கத்தின் தலைவா் வேலுச்சாமி கூறியதாவது: திருப்பூா், கோவை மாவட்ட நீா்வளத் துறை அதிகாரிகள் தண்ணீா்த் திருட்டு தொடா்பாக கண்துடைப்பு நடவடிக்கை மட்டுமே மேற்கொள்கின்றனா்.

20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபா்கள் தண்ணீா்த் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனா். இது குறித்து நீா்வளத் துறை அதிகாரிகள் கடுமையான சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

கடைமடை பகுதிக்கு சமச்சீா் நீா்ப் பங்கீடு இல்லை என நீா்வளத் துறை அதிகாரிகளே சொல்லியும், ஒரு சக்தி அதைத் தடுக்கிறது. ஆகவே, காங்கயம் வெள்ளக்கோவில் கடைமடை பகுதிக்கு பிஏபி சமச்சீா் நீா் வேண்டி பட்டினி போராட்டத்தை தொடங்கியுள்ளோம். கடைமடை பகுதிக்கு 4.8 டிஎம்சி தண்ணீா் வந்தால் மட்டுமே போராட்டம் விலக்கிக் கொள்ளப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.