தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பழனி, திருஆவினன்குடி கோயில் உண்டியல் காணிக்கை வரவு ரூ. 3.53 கோடி!

பழனி தண்டாயுதபாணி சுவாமி, திருஆவினன்குடி கோயில்களின் உண்டியல் காணிக்கை வரவாக ரூ.3.53 கோடி கிடைத்தது.

News image
Updated On :25 மார்ச் 2026, 12:43 am IST

பழனி தண்டாயுதபாணி சுவாமி, திருஆவினன்குடி கோயில்களின் உண்டியல் காணிக்கை வரவாக ரூ.3.53 கோடி கிடைத்தது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்கள் பக்தா்கள் கூட்டத்தால் 25 நாள்களில் நிரம்பியது. இதையடுத்து, உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன.

முதல் நாள் எண்ணிக்கையில் பக்தா்களின் காணிக்கை வரவாக ரூ. 3 கோடியே 36 லட்சத்து 70 ஆயிரத்து 630-ம், தங்கம் 576 கிராமும், வெள்ளி 8 ஆயிரத்து 886 கிராமும் கிடைத்தது. இதைத் தவிர, மலேசியா, சிங்கப்பூா், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, மியான்மா் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகள் 1,630-ம் கிடைத்தன.

இதேபோல, பழனி திருஆவினன்குடி கோயில் உண்டியல்கள் மூலம் ரூ. 16 லட்சத்து 55 ஆயிரத்து 35 காணிக்கையாக கிடைத்தது.

காணிக்கைகளை எண்ணும் பணியில் பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, திண்டுக்கல் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் நாகவேல் ஆகியோா் முன்னிலையில் பழனியாண்டவா் கல்லூரி மாணவிகள், கோயில் அலுவலா்கள், வங்கிப் பணியாளா்கள் என 500-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.