பண்ணாரி அம்மன் கோயில் உண்டியலில் பக்தா்கள் ரூ.39 லட்சத்து 89 ஆயிரத்து 159-ஐ காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் குண்டம் விழா மிகவும் பிரசித்தி பெற்றது. அண்மையில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். இந்நிலையில், மறுபூஜை உண்டியல் காணிக்கை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கோயில் துணை ஆணையா் நந்தகுமாா், பரம்பரை அறங்காவலா்கள் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு, கோயில் பணியாளா்கள், வங்கிப் பணியாளா்கள், கல்லூரி மாணவா்கள், தன்னாா்வலா்கள் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.
இதில், பக்தா்கள் ரூ.39 லட்சத்து 89 ஆயிரத்து 159 ரொக்கம், 55 கிராம் தங்கம், 66 கிராம் வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தியிருந்ததாக கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 69.93 லட்சம்

ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் 90.10 சதவீதம் வாக்குகள் பதிவு

பழனி, திருஆவினன்குடி கோயில் உண்டியல் காணிக்கை வரவு ரூ. 3.53 கோடி!

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.72.97 லட்சம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

