பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல் காணிக்கையாக ரொக்கம் ரூ.6.97 கோடி கிடைத்துள்ளது.
தமிழகத்தின் முதன்மைக் கோயிலான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு 36 நாள்களில் நிரம்பியது. இதையடுத்து உண்டியல்கள் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் திறக்கப்பட்டு மலைக்கோயில் காா்த்திகை மண்டபத்தில் எண்ணப்பட்டது. இதில், பக்தா்களின் காணிக்கை ரொக்கம் ரூ. ஆறு கோடியே 97 லட்சத்து 8 ஆயிரத்து 187 இருந்தது தெரியவந்தது. மேலும், உண்டியலில் தங்கம் 1.035 கிராம், வெள்ளி 16,793 கிராம், பல்வேறு வெளிநாட்டு பணத்தாள்கள் 2,240-ம் இருந்தது தெரியவந்தது.
இவை தவிர பித்தளை வேல், கைக்கடிகாரம், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா். ஐநூறுக்கும் மேற்பட்டோா் உண்டியல் எண்ணிக்கையில் ஈடுபட்டனா்.
இவை தவிர, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபகோயிலான அடிவாரம் திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசாமி கோயிலில் ரூ.20,53,634-ம், மீனாட்சியம்மன் கோயிலில் ரூ.18,480-ம், ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பா் கோயிலில் ரூ.1,21,137-ம், ஒட்டன்சத்திரம் காமாட்சியம்மன் கோயிலில் ரூ.20,868-ம் காணிக்கையாக கிடைத்துள்ளது.
காணிக்கை எண்ணும் பணியில், பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் செந்தில்குமாா், அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்செந்தூா் கோயில் உண்டியல் வருமானம் ரூ. 3.95 கோடி

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.44 கோடி

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 69.93 லட்சம்

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.27 கோடி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

