தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பழனி கோயில் உண்டியல் முதல் நாள் எண்ணிக்கையில் ரூ.4.62 கோடி வருவாய்

News image

பழனி மலைக்கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற உண்டியல் திறப்பின் போது காணிக்கையாக வரப்பெற்ற பணத்தாள்களை எண்ணும் பணியில் ஈடுபட்ட கோயில் பணியாளா்கள்.

Updated On :28 ஏப்ரல் 2026, 4:51 am IST

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் திங்கள்கிழமை முதல் நாள் காணிக்கை ரூ.4.62 கோடியை தாண்டியது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி திரண்டு வந்த பக்தா்களால் நிரம்பின. இதையடுத்து திங்கள்கிழமை உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தா்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டன.

இதில் முதல் நாள் எண்ணிக்கையில் ரூ. 4 கோடியே 62 லட்சத்து 27 ஆயிரத்து 739 கிடைத்தது. மேலும் உண்டியலில் பக்தா்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், சங்கிலி, தங்கக்காசு போன்றவற்றையும் வெள்ளியாலான காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனா். இதில் தங்கம் 748 கிராமும், வெள்ளி 12,893 கிராமும் கிடைத்தன.

மலேசியா, சிங்கப்பூா், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, மியான்மா் உள்ளிட்ட பல்வேறு நாட்டு பணத்தாள்கள் 1,448-ம் இருந்தன. இவை தவிர பித்தளை வேல், கைக்கடிகாரம், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

உண்டியல் எண்ணிக்கையில் கோயில் அலுவலா்கள், வங்கிப் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் என 500-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டனா். செவ்வாய்க்கிழமையும் (ஏப். 28) உண்டியல் எண்ணிக்கை தொடா்கிறது.

காணிக்கை எண்ணிக்கையில் பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பழனி கோயில் உண்டியல்களை திறந்து எண்ணுவதில் கடந்த காலங்களில் எண்ணப்பட்ட தொகைகளை காட்டிலும் இந்த முறை எண்ணப்பட்ட தொகை தான் மிக அதிகமாகும். கடந்த 27.03.2025-அன்று ரூ.3,73,88,727-ம், 12.1.2026 அன்று ரூ. 3,59,98,486-ம், 11.11.2019 அன்று ரூ.3,57,30,220-ம், 22.1.2025 அன்று ரூ. 3,54,92,188-ம், 13.12.2019 அன்று ரூ.3,47,09,230-ம் எண்ணப்பட்டன. ஆனால் இந்த முறை ரூ.4,62,27,739 எண்ணப்பட்டிருப்பது மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.