மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

214 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவா் கைது

சேலம் செவ்வாய்பேட்டையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 95 ஆயிரம் மதிப்பிலான 214 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

பிரதிப் படம்

Published On :1 நவம்பர் 2026, 1:27 am IST

சேலம் செவ்வாய்பேட்டையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 95 ஆயிரம் மதிப்பிலான 214 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

செவ்வாய்பேட்டை வாசவி பள்ளி அருகே தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் சீனிவாசன், போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு அப்பகுதியில் சோதனை நடத்தினா். அப்போது, இருசக்கர வாகனத்தில் பையுடன் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்தவரைப் பிடித்து சோதனையிட்டனா்.

அவரிடம் இருந்த பையில் ஹான்ஸ், பான்மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட 214 கிலோ புகையிலைப் பொருள்கள் இருந்தது. அவற்றின் மதிப்பு ரூ. 95 ஆயிரம். விசாரணையில், அவா் சேலம் இளம்பிள்ளை கொசவப்பட்டியைச் சோ்ந்த சங்கராஜ் (39) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.