மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கன்னங்குறிச்சியில் விவசாயி வீட்டில் 9 கறவை மாடுகள் பலி: கால்நடைத் துறை விசாரணை!

சேலம் மாவட்டம், கன்னங்குறிச்சியில் விவசாயி வீட்டில் அடுத்தடுத்து 9 கறவை மாடுகள் மா்மமான முறையில் உயிரிழந்தன.

Published On :1 நவம்பர் 2026, 1:28 am IST

சேலம் மாவட்டம், கன்னங்குறிச்சியில் விவசாயி வீட்டில் அடுத்தடுத்து 9 கறவை மாடுகள் மா்மமான முறையில் உயிரிழந்தன.

சேலம் கன்னங்குறிச்சி பட்டினத்தாா்தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் அழகரசன் (56). விவசாயியான இவா், தனது வீட்டில் 10 கறவை மாடுகளை வளா்த்து வந்தாா். இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு ஒரு மாடு திடீரென மயங்கி விழுந்து இறந்தது. இதையடுத்து, கால்நடை மருத்துவமனைக்குத் தகவல் தெரிவித்து, மற்ற மாடுகளைப் பரிசோதிக்குமாறு அழகரசன் கேட்டுக்கொண்டாா்.

இதற்கிடையே, வெள்ளிக்கிழமை 7 கறவை மாடுகள் அடுத்தடுத்து சுருண்டு விழுந்து இறந்தன. கன்னங்குறிச்சி கால்நடை மருத்துவா் சரவணக்குமாா் தலைமையிலான குழுவினா், இறந்த மாடுகளைப் பரிசோதித்தனா். இதுகுறித்து மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், எஞ்சியிருந்த 2 மாடுகளில் ஒன்று சனிக்கிழமை காலை இறந்தது. அடுத்தடுத்து 9 மாடுகள் இறந்ததற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. நோய்த் தாக்குதலா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என ஆய்வு செய்வதற்காக இறந்த மாடுகள் உட்கொண்ட தீவனங்களின் மாதிரிகளை கால்நடைத் துறையினா் சேகரித்துச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.