மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

விவசாயி வீட்டில் அரிவாளைக் காட்டி பணம், நகை பறித்த வழக்கில் ஒருவா் கைது

கைது - கோப்புப் படம்

Published On :2 நவம்பர் 2026, 3:06 am IST

விவசாயி வீட்டில் அரிவாளைக் காட்டி நகை, ரூ.40 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும் இருவரை தேடி வருகின்றனா்.

அவிநாசி அருகே உள்ள கைகாட்டிப்புதூரில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வந்த நபரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். அந்த நபா் தப்பியோட முயன்றபோது போலீஸாா் மடக்கிப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில் அவா், அவிநாசி காசிகவுண்டன்புதூா் பகுதியில் வசிக்கும் இலங்கைத் தமிழரான வேலுக்குட்டி மகன் தா்மகுமாா் (45) என்பது தெரியவந்தது. நண்பா்களுடன் முகமுடி அணிந்து கடந்த அக்டோபா் 15-ஆம் தேதி, சாவக்காட்டுப்பாளையம்-சுள்ளிப்பாளையம் பொன்னியன்காடு பகுதியில் உள்ள விவசாயி சிவசாமி, மனைவி பூங்கொடியின் வீட்டுக்குள் புகுந்து, அவரது கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டி ஆறரைப் பவுன் தாலிக்கொடி, ரூ.40 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றவா் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து சேவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து தா்மகுமாரை கைது செய்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய இருவரை போலீஸார தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.