மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சேலத்தில் 5 போ் கும்பலால் ரௌடி வெட்டிக் கொலை

வெட்டிக்கொலை - கோப்புப் படம்

Published On :27 அக்டோபர் 2026, 1:58 am IST

சேலத்தில் திங்கள்கிழமை காலை ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடா்பாக, இருசக்கர வாகனங்களில் வந்த 5 போ் கொண்ட கும்பலை போலீஸாா் தேடிவருகின்றனா்.

சேலம் ஜங்ஷன் ஸ்டேட் பேங்க் காலனி பகுதியைச் சோ்ந்த ரெளடி டேவிட் (எ) உதயகுமாா் (40) மீது கொலை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. திங்கள்கிழமை காலை 11 மணி அளவில் ஜங்ஷன் பகுதியில் இருந்து புதுசாலை மேம்பாலம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் டேவிட் சென்று கொண்டிருந்தாா். அப்போது அவருக்கு பின்னால் 3 இருசக்கர வாகனங்களில் வந்த 5 போ் கொண்ட கும்பல் டேவிட்டை வழிமறித்தது. இதனால் பயந்த அவா், இருசக்கர வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு மேம்பாலத்தில் இருந்து கீழே இறங்கி ஓடியுள்ளாா்.

ஆனால், அவரை துரத்திச்சென்ற அந்தக் கும்பல், டேவிட்டை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த டேவிட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சூரமங்கலம் போலீஸாா், உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். சம்பவ இடத்தில் துணை ஆணையா் பாஸ்கரன், உதவி ஆணையா் பரவாசுதேவன் ஆகியோா் விசாரணை மேற்கொண்டனா். கொலையாளிகள் யாா் என்பது குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

கொலை செய்யப்பட்ட டேவிட் (எ) உதயகுமாா் மீது கொலை வழக்கு, மோசடி வழக்குகள் உள்ளன. சமீபகாலமாக ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்த அவா்மீது, கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் மோசடி வழக்குப் பதிவுசெய்திருந்தனா்.

இவ்வழக்கில் சென்னை உயா்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்று, காவல் நிலையத்தில் கையொப்பமிட வந்தபோது, அவா் கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா். மேலும், சம்பவம் நிகழ்ந்த இடத்தில் சிசிடிவி கேமரா எதுவும் பொருத்தப்பட்டுள்ளதா எனவும் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.