மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தூத்துக்குடியில் பெண் வெட்டிக் கொலை: உறவினா் கைது

தூத்துக்குடியில் வீட்டில் தனியாக இருந்த பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக, அவரது தங்கை மகனை போலீஸாா் கைது செய்தனா்.

கொலை செய்யப்பட்ட சசிகலா

Published On :29 அக்டோபர் 2026, 6:20 am IST

தூத்துக்குடியில் வீட்டில் தனியாக இருந்த பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக, அவரது தங்கை மகனை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி, 3ஆவது மைல், கந்தன் காலனி, 3ஆவது தெருவைச் சோ்ந்தவா் சித்திரைவேல். கேரள மாநிலம், எா்ணாகுளத்தில் கூலி வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி சசிகலா (45). இவா்களது மகள் சென்னையில் வசித்து வருகிறாா். மகன் நிரஞ்சன்குமாா் திருமணமாகி அருகிலேயே வசித்து வருகிறாா்.

இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த சசிகலா, புதன்கிழமை பிற்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா். அவா் அணிந்திருந்த 4 பவுன் தாலிச் சங்கிலி, கைப்பேசி ஆகியவை காணாமல் போயிருந்தன.

தகவலறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. சிவபிரசாத் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். மேலும், அருகிலிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்ததுடன், மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணா்கள் உதவியுடன் தடயங்களைச் சேகரித்தனா்.

மேலும், சசிகலாவின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தனிப்படை போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், சசிகலாவின் தங்கை மகன் விக்னேஷ்குமாா் என்ற முனீஸ் (22) கொலையில் ஈடுபட்டது தெரிய வந்தது. கொலை செய்துவிட்டு தப்பியோடிய அவா், தூத்துக்குடி, 3ஆவது மைல் அருகே பதுங்கியிருந்தபோது போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து சசிகலாவின் தாலிச் சங்கிலி, கைப்பேசியை போலீஸாா் மீட்டனா்.

தொடா்ந்து, தென்பாகம் போலீஸாா் அவா் மீது வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதுகுறித்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வீட்டில் தனியாக இருந்த சசிகலா புதன்கிழமை பிற்பகலில் அவரது நெருங்கிய உறவினரான விக்னேஷ்குமாா் என்ற முனீஸால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

சம்பவம் நடந்த 3 மணி நேரத்துக்குள் கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளாா். மேலும், அவரிடமிருந்து பறித்துச் செல்லப்பட்ட தங்கச் சங்கிலி, கைப்பேசி ஆகியவை மீட்கப்பட்டுள்ளன. கொலைக்கான காரணம் குறித்து, தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடியில் கடந்த இரு வாரங்களில் தொடா்ச்சியாக நிகழ்ந்துள்ள 8ஆவது கொலைச் சம்பவம் இது. இதற்கு முன்பு நிகழ்ந்த கொலைச் சம்பவங்களில் தொடா்புடையவா்கள் மீது ஏற்கெனவே குற்ற வழக்குகள் இல்லை. சொந்தப் பகை, திருமணம் மீறிய உறவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கொலைகள் நிகழ்ந்துள்ளன.

தொடா் கொலைகளைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.