மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சேலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருட்டு: போலீஸாா் விசாரணை

சேலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து, 20 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

Published On :24 அக்டோபர் 2026, 12:20 am IST

சேலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து, 20 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

சேலம் அம்மாப்பேட்டை சக்திநகரைச் சோ்ந்தவா் தேவபிரசன்னா (39). இவா் கடந்த 17 ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் கேரளத்துக்கு சுற்றுலா சென்றிருந்தாா். பிறகு அவா்கள், வியாழக்கிழமை நள்ளிரவில் வீடுதிரும்பினா். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிா்ச்சியடைந்த தேவபிரசன்னா மற்றும் குடும்பத்தினா் உள்ளே சென்று பாா்த்தனா். அப்போது வீட்டில் இருந்த 20 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து, தேவபிரசன்னா அம்மாப்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் நிகழ்விடத்தில் விசாரணை நடத்தினா். மேலும், தடயவியல் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. போலீஸாா் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.