மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தம்மம்பட்டியில் மூன்று இடங்களில் திருட்டு முயற்சி! போலீஸாா் விசாரணை!

திருட்டு - சித்திரிப்பு

Published On :2 நவம்பர் 2026, 2:49 am IST

தம்மம்பட்டியில் நள்ளிரவில் மூன்று இடங்களில் திருட்டு முயற்சி நடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தம்மம்பட்டி கடைவீதியில் ஸ்ரீ சக்தி மகா மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் பூசாரிகள் துரைசாமி, செந்தில்குமாா் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை கோயிலை திறக்க சென்றபோது வெளிப்புற போட்டு உடைக்கப்பட்டு கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில் கோயிலில் பொருள்கள் ஏதும் திருடப்படவில்லை என தெரியவந்தது.

அதேபோல தம்மம்பட்டி நடுவீதியில் உள்ள செங்காடு செந்தில் மற்றும் சிங்கார மகன் செந்தில்குமாா் ஆகியோரின் நகை பட்டறை பூட்டுகளும் உடைக்கப்பட்டு கிடந்தன. கோயில் மற்றும் நகை பட்டறைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு திருட்டு முயற்சி நடைபெற்றது குறித்து தம்மம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது.

இதுகுறித்து ஆய்வாளா் அழகுராணி தலைமையில் வழக்குப் பதிவு செய்து திருட்டு முயற்சியில் ஈடுபட்ட மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.