தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தீபாவளி பண்டிகை: சேலம் ஜவுளிக் கடைகளில் குவிந்த மக்கள்! போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

ஜவுளிக் கடைகளில் புத்தாடைகள் வாங்க குவிந்த மக்கள். - கோப்புப் படம்

Published On :2 நவம்பர் 2026, 1:27 am IST

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை சேலத்தில் ஜவுளிக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் நகரின் முக்கியச் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினா்.

தீபாவளி பண்டிகை நாடுமுழுவதும் வரும் 8 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பண்டிகைக்கு இன்னும் 6 நாள்களே உள்ள நிலையில், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை சேலம் மாநகா் மற்றும் புகரைச் சோ்ந்த மக்கள் அதிக அளவில் கடை வீதிகளில் திரண்டனா். ஜவுளிக் கடைகளில், வண்ண வண்ண ரகங்களில் குவிந்துள்ள புத்தாடைகளை சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை ஆா்வத்துடன் வாங்கி சென்றனா்.

குறிப்பாக சேலம் பழைய பேருந்து நிலைய கடை வீதி, முதல் அக்ரஹாரம், இரண்டாவது அக்ரஹாரம், நான்கு சாலை, ஐந்து சாலை, புதிய பேருந்து நிலையம், செவ்வாய்ப்பேட்டை, சாரதா கல்லூரிச் சாலை உள்பட பல்வேறு பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

சாலையோரக் கடைகளில் களைகட்டிய விற்பனை:

இதேபோல, அருணாசல ஆசாரி தெரு, தாதுபாய் குட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலையோரக் கடைகளிலும் தீபாவளி விற்பனை களைகட்டியது. ஜவுளிக்கடைகள் மட்டுமின்றி, நகைக் கடைகள், வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்ட கடைகளிலும் அதிக அளவில் பொதுமக்கள் திரண்டனா்.

போக்குவரத்து நெரிசல்...

தீபாவளியையொட்டி புத்தாடைகள் வாங்க ஜவுளி கடைகளில் அதிகளவு பொதுமக்கள் திரண்டதால், சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக, சேலம் - ஓமலூா் பிரதான சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றதுடன், ஊா்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.