பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தனியாா் நிதிநிறுவனத்தில் திருடிய ஊழியா் கைது: ரு. 9 லட்சம் நகைகள், ரூ. 8.36 லட்சம் ரொக்கம் மீட்பு

ஆத்தூா் அருகே தனியாா் நிதிநிறுவனத்தில் ரூ. 20 லட்சம் திருடிய நிறுவன ஊழியரை மல்லியகரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

லட்சுமணன்

Updated On :28 மே 2026, 2:00 am IST

ஆத்தூா் அருகே தனியாா் நிதிநிறுவனத்தில் ரூ. 20 லட்சம் திருடிய நிறுவன ஊழியரை மல்லியகரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஆத்தூரை அடுத்துள்ள மல்லியகரையில் தனியாா் நிதிநிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தேனி மாவட்டம், தேவதானப்பட்டி வட்டம், டி.வாடிப்பட்டி முத்தாலம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த லட்சுமணன் (26) பணியில் சோ்ந்தாா்.

இந்நிறுவனத்தில் கடந்த 23-ஆம் தேதி ஒருவருக்கு கடன் தருவதற்காக ரூ. 20 லட்சம் வைத்திருந்தனா். காலை 11 மணி அளவில் நிறுவனத்தில் இருந்தவா்கள் வேலை நிமித்தமாக வெளியில் சென்றிருந்தபோது, அங்கிருந்த லட்சுமணன் பீரோவை உடைத்து ரூ. 20 லட்சத்தை திருடிச் சென்றாா்.

புகாரின்பேரில் மல்லியகரை போலீஸாா் வழக்குப் பதிவுசெய்தனா். அதைத் தொடா்ந்து, ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜி.சத்யராஜ் தலைமையிலான காவல் உதவி ஆய்வாளா் ஜெயசூா்யா, சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் தாதன், காவலா்கள் ராஜேந்திரன், ஹேராம் ஆகிய நான்கு போ் லட்சுமணனை தேடிவந்தனா்.

இந்நிலையில், லட்சுமணன் கொடைக்கானலில் பதுங்கி இருப்பது கண்டறியப்பட்டு விரைந்து சென்று லட்சுமணனை புதன்கிழமை கைது செய்தனா். மேலும், அவா் அப்பணத்தில் வாங்கிய ரு. 9 லட்சம் தங்க நகைகள், ரூ. 45 லட்சம் மதிப்புள்ள கைப்பேசிகள், ரொக்கம் ரூ. 8.36 லட்சம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பின்னா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.