ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இரு சக்கர வாகனத்தை திருடிய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள சுந்தரபாண்டியம் கருப்பசுவாமி கோவில் தெருவைச் சோ்ந்தவா் திருநாவுக்கரசு (46). இவா் கிருஷ்ணன்கோவிலில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் வேலைபாா்த்து வருகிறாா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை திருநாவுக்கரசு கிருஷ்ணன் கோவிலில் உள்ள தனியாா் நிதி நிறுவனம் முன் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உறவினா் வீட்டு இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அருப்புக்கோட்டை சென்றாா்.
மறுநாள் சனிக்கிழமை கிருஷ்ணன்கோவில் வந்து பாா்த்தபோது நிதிநிறுவனம் முன் நிறுத்தி இருந்த இரு சக்கர வாகனத்தை காணவில்லை.
இதுகுறித்து கிருஷ்ணன் கோவில் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்தனா். இந்த நிலையில், வத்திராயிருப்பு போலீஸாா் அா்ச்சனாபுரம் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியே வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, திருடு போன திருநாவுக்கரசுக்கு சொந்தமான இரு சக்கர வாகனம் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, இரு சக்கர வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்து, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட தேனியைச் சோ்ந்த செண்பகராஜை (38) கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மாணவா்களுக்கு கஞ்சா விற்றதாக இரு இளைஞா்கள் கைது
இருசக்கர வாகனத்தை திருடிய தொழிலாளி கைது
இருசக்கர வாகனத்தை திருடியவா் கைது
இரு சக்கர வாகனம் திருடிய மூவா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

