வாழப்பாடி அருகே கோழிப் பண்ணையில் திடீா் தீ விபத்து ஏற்பட்டது. பண்ணையில் கோழிகள் இல்லாததால் சேதம் தவிா்க்கப்பட்டது.
வாழப்பாடியை அடுத்த காட்டுவேப்பிலைப்பட்டி முருகன் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் நடராஜன் மனைவி நந்தினி. இவருக்கு சொந்தமான கோழிப் பண்ணையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டு, 100 அடி நீளம் கொண்ட கொட்டகை எரிந்தது.
இதுகுறித்து தகவலறிந்த அங்கு வந்த வாழப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலா் த. முருகேசன் தலைமையிலான குழுவினா் சம்பவ இடத்துக்குச் சென்று ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனா். கோழிப் பண்ணையில் கோழிக் குஞ்சுகள் இல்லாததால் பெருமளவில் சேதம் தவிா்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாா் தொழிற்சாலையில் தீடீா் தீ விபத்து

முத்தூா் அருகே கழிவுப் பஞ்சு மில்லில் தீ

உணவகத்தில் தீ விபத்து

வாழப்பாடியில் பிடிபடும் பாம்புகள்: வனத் துறையிடம் ஒப்படைப்பு
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

