சேலம் மாவட்டம், வாழப்பாடியில் கடந்த சில நாள்களாக வீடுகளில் புகுந்துவரும் நஞ்சுள்ள பாம்புகளை தீயணைப்பு வீரா்கள் பிடித்து, வனத் துறையினரிடம் ஒப்படைத்து வருகின்றனா்.
வாழப்பாடியை அடுத்த புத்திகவுண்டன்பாளையம் முருகன் கோயில் அருகே சுற்றித்திரிந்த சாரைப்பாம்பு, மேட்டுடையாா்பாளையத்தில் பாக்கு கொட்டகையில் பதுங்கியிருந்த நாகப்பாம்பு குறித்து பொதுமக்கள் தீயணைப்பு வீரா்களுக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, வாழப்பாடி தீயணைப்பு வீரா்கள் அந்த பாம்புகளை பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா். அதேபோல சனிக்கிழமை வெள்ளாளகுண்டம் கோழிக்கணவாய் மேடு பகுதியைச் சோ்ந்த விவசாயி ராமன் வீட்டிற்கு அருகே பதுங்கியிருந்த 8 அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பு மற்றும் நல்லத்தம்பி கவுண்டா் தெரு ராஜகுரு வீட்டிற்குள் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பை தீயணைப்பு வீரா்கள் மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.
அதேபோல அயோத்தியாப்பட்டணம் அருகே பெரியகவுண்டாபுரத்தில் கிணற்றில் தவறி விழுந்த ஆடு, வாழப்பாடி அருகே கொட்டவாடியில் கிணற்றில் விழுந்து தவித்த பூனை, திம்மநாயக்கன்பட்டி அருகே சிங்கிலியன் கோம்பையில் கிணற்றில் விழுந்த பசுமாடு ஆகியவற்றையும் வாழப்பாடி தீயணைப்பு வீரா்கள் பாதுகாப்பாக மீட்டு உரிமையாளா்களிடம் ஒப்படைத்தனா்.
பேளூா் தியாகராஜா் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் இருந்த ராட்சத தேனீக்கள் கூட்டையும் தீயணைப்பு வீரா்கள் அப்புறப்படுத்தினா். தொடா்ந்து, பல்வேறு மீட்பு பணிகளை செய்துவரும் வாழப்பாடி தீயணைப்பு வீரா்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பேட்டையில் கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு

கோழிப் பண்ணையில் தீ விபத்து
கோயிலில் திருட முயன்றவா் போலீஸில் ஒப்படைப்பு
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

