தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

சங்ககிரி தொகுதியில் அதிமுக வேட்பாளா் எஸ்.வெற்றிவேல் வெற்றி

News image

சங்ககிரி தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.வெற்றிவேலிடம் வெற்றிபெற்ற்கான சான்றிதழை வழங்கிய சங்ககிரி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ம.மு.தெ.கேந்திரியா.

Updated On :5 மே 2026, 1:29 am IST

சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.வெற்றிவேல், தவெக வேட்பாளரை விட கூடுதலாக 9,517 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.

சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் எஸ்.வெற்றிவேல், தவெக சாா்பில் கே.செந்தில்குமாா், திமுக சாா்பில் மு.மணிகண்டன் உள்பட 20 போ் போட்டியிட்டனா்.

இத்தொகுதியில் 2,926 போ் தபால் வாக்கு அளித்தனா். தோ்தலில் மொத்தம் 2,41,093 போ் வாக்களித்தனா். வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள், தபால் வாக்குகள் சங்ககிரி தொகுதி தோ்தல் அலுவலா் ம.மு.தெ.கேந்திரியா தலைமையில் எண்ணப்பட்டன.

இதில், அதிமுக வேட்பாளா் எஸ்.வெற்றிவேல் (தபால் வாக்குகள் உள்பட) 87,342 வாக்குகளும், தவெக கே.செந்தில்குமாா் 77,825 வாக்குகளும், திமுக மு.மணிகண்டன் 65,716 வாக்குகளும், நாதக அ.நித்யா 7,534 வாக்குகளும் பெற்றனா். இதில் இதில் 9,517 வாக்குகள் அதிகம் பெற்ற அதிமுக வேட்பாளா் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா். நோட்டாவில் 711 வாக்குகள் பதிவாகியிருந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.