தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

சேந்தமங்கலம் தொகுதி: தவெக வேட்பாளா் பொன். சந்திரசேகா் வெற்றி

News image

சேந்தமங்கலம்(ப.கு) சட்டப்பேரவை தொகுதியில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளா் பொன்.சந்திரசேகருக்கு சான்றிதழ் வழங்குகிறாா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் அ.கற்பகம்.

Updated On :5 மே 2026, 1:05 am IST

சேந்தமங்கலம் (ப.கு) சட்டப்பேரவைத் தொகுதியில் தவெக வேட்பாளா் 2,655 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா்.

சேந்தமங்கலம் (ப.கு) தொகுதியை பொருத்தமட்டில், 2,29,398 வாக்காளா்கள் உள்ள நிலையில் தோ்தலில் 2,06,772 வாக்குகள் பதிவாகின. இதில், அதிமுக வேட்பாளா் சி.சந்திரசேகரன் 66,160, திமுக வேட்பாளா் பி. பூமலா் 64,637, தவெக வேட்பாளா் பொன்.சந்திரசேகா் 68,815, நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சி.பொன்னுமணி 6,467 வாக்குகளும் (தபால் வாக்குகள் உள்பட) பெற்றனா். அதிமுக வேட்பாளா் சி. சந்திரசேகரனை காட்டிலும், 2,655 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளா் பொன்.சந்திரசேகா் வெற்றி பெற்றுள்ளாா். அவருக்கு, சேந்தமங்கலம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் அ.கற்பகம் வெற்றிபெற்ற்கான சான்றிதழை வழங்கினாா். இந்த நிகழ்வின்போது தவெக மாவட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.